திருமலையில் பணியாற்றும் வேற்றுமதத்தினர்! நடவடிக்கை பாயுமா?

 

திருமலையில் பணியாற்றும் வேற்றுமதத்தினர்! நடவடிக்கை பாயுமா?

“இந்துக்களின் மிகப்பெரிய திருத்தலமான திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாற்று மதத்தினர் பணியாற்றுவதை இந்துக்கள் விரும்ப மாட்டார்கள். எந்த மதத்தையும் நாங்கள் குறை கூறவில்லை. இங்கு பணியாற்றும் வேற்று மதத்தைச் சேர்ந்த ஊழியர்கள் தயவு செய்து தங்களது பணியை ராஜினாமா செய்து விடுங்கள்”

சமீபத்தில் திருப்பதிதிருமலை இடையே இயக்கப்படும் ஆந்திர அரசுப் பேருந்து டிக்கெட்டின் பின்புறம் ஜெருசலேம் மற்றும் ஹஜ் யாத்திரை செல்வதற்கான விளம்பரம் அச்சிடப்பட்டிருந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருமலையில் வேற்று மதப் பிரச்சாரம் உட்பட தர்ணாக்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், அங்கு பணிபுரியும் 46 ஊழியர்கள் பணியில் சேர்ந்த பின்னர், வேற்று மதத்துக்கு மாறி உள்ளார்கள். இவர்கள் தற்போது தேவஸ்தானத்தின் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றி வரு கின்றனர். சிலர் தேவஸ்தான அலு வலகத்தில் பணியாற்றுகின்றனர்.

Tirupati

இதுகுறித்து திருமலை தேவஸ்தானம் சார்பில் ஆய்வு செய்யும்போது அவர்கள் மதம் மாறியது தெரியவந்ததும், மதம் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தாய்மதம் திரும்ப மறுத்துவிட்டனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வந்த மாநில முதன்மை செயலாளர் எல்.வி.சுப்ர மணியத்திடம் இவ்விவகாரம் எழுப்பப்பட்டது. பின்னர் அவர் கூறும்போது, ‘‘மதம் மாறுவதை நாங்கள் குறை கூறவில்லை. ஆனால், இந்துக்களின் மிகப்பெரிய திருத்தலமான திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாற்று மதத்தினர் பணியாற்றுவதை இந்துக்கள் விரும்ப மாட்டார்கள். எந்த மதத்தையும் நாங்கள் குறை கூறவில்லை. இங்கு பணியாற்றும் வேற்று மதத்தைச் சேர்ந்த ஊழியர்கள் தயவு செய்து தங்களது பணியை ராஜினாமா செய்து விடுங்கள். ‘நாங்கள் இந்துதான்என நீங்கள் எங்களை நம்பவைக்க முயற்சி செய்தால், நாங்கள் அடிக்கடி உங்களது வீடுகளில் சோதனையிட வேண்டி இருக்கும். உங்களை இரவு பகலாக கண்காணிக்க வேண்டி வரும்’’ எனக் கூறினார்.