திருமண கோலத்தில் பிக் பாஸ் ஜூலி…வைரல் போட்டோஸ்!

 

திருமண கோலத்தில் பிக் பாஸ் ஜூலி…வைரல் போட்டோஸ்!

வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஜூலியை சரமாரியாகக் கலாய்க்க சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ஆர்மிகள் உள்ளன.

‘ஜல்லிக்கட்டு’ போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சியாக அறியப்பட்ட ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஜூலியை சரமாரியாகக் கலாய்க்க சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ஆர்மிகள் உள்ளன.பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனும்  முடிந்துவிட்டது.

ttn

ஆனால், ஜூலியை கலாய்ப்பது மட்டும் ஓயவில்லை.பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்த ஜூலி, திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் ஹீரோயினாக மாறியும் அவரை ஹேட்டர்ஸ்கள் விடுவதாக இல்லை.

ttn

இந்நிலையில் பிக் பாஸ் ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டட்ஸ் போட்டோஷூட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் திருமண பெண் போல அலங்காரம் செய்தபடி உள்ளார்.

ttn

இந்த  போட்டோக்களை பார்த்த நெட்டிசன் ஒருவர், கிளாமர் போட்டோஷூட் போடுங்க தலைவி, படம் வாய்ப்புகள் கிடைக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

ttn

இன்னும் சிலரோ அழகாக  இருக்கீங்க ஜூலி என்று கூறி வருகிறார்கள்.