திருமணம் குறித்து கேள்வி கேட்ட ரசிகரை பார்ட்டிக்கு அழைத்த ஸ்ருதி ஹாசன்!

 

திருமணம் குறித்து கேள்வி கேட்ட ரசிகரை பார்ட்டிக்கு அழைத்த ஸ்ருதி ஹாசன்!

நடிகை ஸ்ருதி ஹாசன் திருமணம் குறித்து கேள்வி கேட்ட ரசிகரை பார்ட்டிக்கு அழைத்துப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசன் திருமணம் குறித்து கேள்வி கேட்ட ரசிகரை பார்ட்டிக்கு அழைத்துப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உலக நாயகன் கமலின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர்,என பன்முகத் திறமை கொண்டவர். இவர் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்தார் என்பதும் அந்த காதலும் சமீபத்தில் பிரேக் அப் ஆனது என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. 

பின்பு நீண்ட நாள் கழித்து படங்களில் நடிப்பதை தொடர ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் தற்போது அமெரிக்க தொலைக்காட்சி தொடர் மற்றும் விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் உரையாடி கொண்டு இருந்தார். அப்போது ஒருவர் ஸ்ருதியிடம் ‘உங்கள் திருமணம் எப்போது? திருமணத்தின் போது எங்களுக்கு அழைப்பு விடுத்தால் நாங்கள் அனைவரும் திருமணத்தில் கலந்து கொள்வோம்’ என்று கூறியிருந்தார். 

shruti hassan

இந்த கேள்விக்குப் பதிலளித்த ஸ்ருதிஹாஸன், ‘என்னுடைய திருமணத்திற்கு நீங்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். அதற்கு முன் என்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வாருங்கள், சேர்ந்து கொண்டாடுவோம்’ என்று பதிலளித்துள்ளார். ஆகையால் இந்த பதிவின் மூலம் ஸ்ருதிஹாசனின் திருமணம் இப்போதைக்கு இல்லை என்று வெட்டவெளிச்சமாக வெளிவந்துள்ளது.