திருமணத்துக்கு அடுத்த நாள் கன்னித் தன்மை சோதனை; பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

 

திருமணத்துக்கு அடுத்த நாள் கன்னித் தன்மை சோதனை; பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரியான சரத் என்பவர் திருமண தகவல் மையம் மூலம் எம்.பி.ஏ பட்டதாரியான பெண் ஒருவரை கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர்

பெங்களூரு: திருமணம் முடிந்த அடுத்த நாளே கட்டாயப்படுத்தி கன்னித் தன்மை சோதனைக்கு பெண் ஒருவர் உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரியான சரத் என்பவர் திருமண தகவல் மையம் மூலம் எம்.பி.ஏ பட்டதாரியான பெண் ஒருவரை கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர்.

அவர்களது திருமணத்துக்கு 15 நாட்களுக்கு முன்னர் அப்பெண்ணின் தாய் உயிரிழந்து விட்டதால் அதிர்ச்சியில் இருந்த அவர், சரத்துடன் சரியாக பேசவில்லை என தெரிகிறது. இதனால், அப்பெண்ணுக்கு திருமணத்தில் இஷ்டம் இல்லை என சரத் தவறாக புரிந்து கொண்டுள்ளார்.

marriage

எனினும், இவர்கள் இருவருக்கும் 2018-ஆம் ஆண்டில் திருமணம் நடந்துள்ளது. திருமனத்துக்கு அடுத்த நாள், அப்பெண்ணுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, சில படிவங்களில் அவரிடம் மருத்துவமனை ஊழியர்கள் கையெழுத்து வாங்கியுள்ளனர். அவசரத்தில் படிவங்களை சரியாக படிக்காமல் அப்பெண்ணும் கையெழுத்து போட்டுள்ளார்.

அதன்பின்னர், மருத்துவ பரிசோதனைகளின் போது, தனக்கு கன்னித் தன்மை சோதனை செய்யப்படுவது குறித்து அறிந்த அப்பெண் அதிர்ந்து போயுள்ளார். பரிசோதனைகள் முடிந்ததும், சரத்திடம் கடுமையாக சண்டை போட்டு விட்டு தனது சகோதரி வீட்டுக்கு அப்பெண் சென்று விட்டார். மூன்று மாதங்கள் கழித்து கணவர் சரத்திடம் இருந்து விவாகரத்து நோட்டீஸ் வந்துள்ளது.

virginity

தொடர்ந்து, விவாகரத்துஆலோசனை மையத்திற்கு வந்த அப்பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அப்பெண்ணின் வேண்டுகோளை ஏற்று சரத்தை சமாதானம் செய்ய முயன்றுள்ளதாக தெரிகிறது. ஆனால், தனக்கு விவாகரத்து வேண்டும் என அவர் பிடிவாதமாக இருந்துள்ளார். அதேபோல், தனது தாயை இழந்த அப்பெண்ணுக்கு மனதளவில் எவ்விதமான ஆறுதலாகவும் சரத் இருக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே, தனது நம்பகத்தன்மையை சந்தேகிக்த்த கணவர் சரத் மீது காவல்நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் அப்பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.