திருப்பூர் போலீசாரின் அடாவடியான அறிக்கை! கொந்தளிப்பில் மக்கள்!

 

திருப்பூர் போலீசாரின் அடாவடியான அறிக்கை! கொந்தளிப்பில் மக்கள்!

‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’என்பதை வசதியாய் அதிகாரத்தில் இருப்பவர்களும் மறந்து விடுகிறார்கள். நிர்பயா விவகாரத்திற்கு முன்பிருந்தே பெண்களின் உடை விஷயத்தில் நாடு முழுவதும் அதிருப்தி இருந்து வந்த நிலையில், நிர்பயா விவகாரத்திற்கு பிறகு உடைக்கட்டுபாடு குறித்து நாடெங்கும் பல்வேறு விவாதங்கள், பிரதி வாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’என்பதை வசதியாய் அதிகாரத்தில் இருப்பவர்களும் மறந்து விடுகிறார்கள். நிர்பயா விவகாரத்திற்கு முன்பிருந்தே பெண்களின் உடை விஷயத்தில் நாடு முழுவதும் அதிருப்தி இருந்து வந்த நிலையில், நிர்பயா விவகாரத்திற்கு பிறகு உடைக்கட்டுபாடு குறித்து நாடெங்கும் பல்வேறு விவாதங்கள், பிரதி வாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில், கல்லூரி மாணவி ஒருவர், சக மாணவர் கல்லூரி வாசலில் தன்னை மானபங்கப்படுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது, காவலர்களே மாணவி அணிந்திருந்த உடையை விமர்சித்து புகார் ஏதும் பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பிய அவல நிலை மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் திருப்பூர் காவல் நிலையம் வினோதமான அறிவிப்பு ஒற்றை வெளியிட்டிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tirupur

திருப்பூர் மாநகர காவல்நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் ஆண்கள் லுங்கி, குட்டை ட்ராயர் ஆகியவற்றை அணிந்து வரகூடாது என்றும், பெண்கள் நைட்டி அணிந்து வரக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய வினோத கட்டுப்பாடு மக்களிடையே பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பியுள்ளது. சிவில் நடவடிக்கைகளுக்காக காவல் நிலையம் வருவோர் மேற்சொன்ன உடைகளை பெரும்பாலும் காவல் நிலையத்திற்கு செல்லும் போது அணிந்து செல்வதில்லை. ஆனால் ஏதாவது குற்ற செயலோ அல்லது விபத்தோ ஏற்படும் போது சம்பந்தப்பட்டவர்கள் அடித்து பிடித்து காவல் நிலையத்திற்கு ஓடி வரும் போது உடை ஒழுங்கை கவனிக்க முடியுமா, இதற்காக வீட்டிற்குச் சென்று சாவகாசமாக உடை மாற்றிக் கொண்டா காவல் நிலையம் செல்ல முடியும்? அப்படியே சென்றாலும், காவல் நிலையத்தின் எல்லைக் கோடு பிரச்சனையைச் சொல்லி அலைக்கழிப்பார்கள் என்று அதிருப்தியை தெரிவிக்கிறார்கள் திருப்பூர் மக்கள்!