‘திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டமாகிறது’: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

 

‘திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டமாகிறது’: முதல்வர் எடப்பாடி பழனிசாமி  அறிவிப்பு!

எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சி , செங்கல்பட்டு , தென்காசி ஆகியவற்றை மாவட்டங்களாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

‘திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டமாகிறது’: முதல்வர் எடப்பாடி பழனிசாமி  அறிவிப்பு!

சென்னை: திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகியவற்றைத் தலைமையிடமாகக் கொண்டு மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்படும்  என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

நாடு முழுவதும் இன்று 73ஆவது சுதந்திர தினம் உற்சாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  காலை 9 மணிக்கு சென்னை கோட்டை கொத்தளத்தில்  மூவர்ணக்கொடியை ஏற்றினார். மூன்றாவது முறையாகத் தேசியக் கொடியை முதல்வர் பழனிசாமி ஏற்றியுள்ளார்.

இதனையடுத்து அவர் மக்கள் மத்தியில் சுதந்திர தின உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘வேலூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டமும், திருப்பத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டமும் உருவாக்கப்படும். அதேபோல் ராணிப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டம் உருவாக்கப்படும்’ என்று அறிவித்தார்.  இதன் மூலம்  2 புதிய மாவட்டங்கள் சேர்க்கப்படுவதால் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக உயர்கிறது.

முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சி , செங்கல்பட்டு , தென்காசி ஆகியவற்றை மாவட்டங்களாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.