திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி விழா நாளை தொடக்கம் 

 

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி விழா நாளை தொடக்கம் 

திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் நாளை சம்பக சஷ்டி விழா நாளை வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

சிவகங்கை :

சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் திருத்தளிநாதர் கோயிலில் பிரசித்தி பெற்ற யோக பைரவர் சன்னதி அமைந்துள்ளது . இக்கோயிலில் யோகநிலையில் பைரவர் எழுந்தருளியுள்ளார் என்பது இக்கோயிலின் சிறப்பம்சம் ஆகும் .

bairavar

இத்திருத்தலத்தில் யோகபைரவருக்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் வளர்பிறை பிரதமை திதி முதல் சஷ்டி திதி வரையுள்ள காலம் சம்பகசஷ்டி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. யோக பைரவர் சன்னதியில் சம்பக சஷ்டி பெருந்திருவிழா நாளை தொடங்கி டிசம்பர் 13 ஆம் தேதி வரை  நடைபெறுகிறது . 

நாளை காலை 9:00 மணிக்கு அஷ்டபைரவர் யாகம் துவங்குகிறது. அதனையடுத்து  பூர்ணாகுதி நடந்து பைரவருக்கு அபிஷேகம், தீபராதனை நடைபெறும். நாளைய  தினத்தில் பைரவர் வெள்ளிக்கவசத்தில் அருள்பாலிப்பார். 

அதனை தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு அஷ்டபைரவர் யாகம், பூர்ணாகுதி,அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். அதனையடுத்து பைரவர் சந்தனக் காப்பில் அருள்பாலிப்பார்.

yogabairavar

ஆறு நாட்களிலும் தினசரி காலை ,மாலை இருவேளைகளில் யாகசாலை பூஜை நடைபெறும். யாகசாலை பூஜை தற்போது புதிதாக பைரவர் சன்னதி முன் மண்டபத்திற்கு வெளியே அமைக்கப்படும் புதிய யாகசலையில் நடைபெற உள்ளது. 

ஆறு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுவதால் விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றனர்.