திருப்பதி கோவிலில் இந்து அல்லாதோருக்கு வேலையில்லை! 

 

திருப்பதி கோவிலில் இந்து அல்லாதோருக்கு வேலையில்லை! 

திருப்பதி கோயில் தேவஸ்தானத்தில் இந்து அல்லாதோர் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் என ஆந்திர தலைமைச் செயலர் எல்.வி.சுப்ரமணியம் அறிவித்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது

ஆந்திரப் பிரேசத்தின் திருப்பதியில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயில் தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்களின் மதம் தொடர்பான சர்ச்சை கடந்த ஆண்டு வெடித்தது. இந்நிலையில் தற்போது ஆந்திர தலைமைச் செயலர் சுப்ரமணியம்,  திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் இந்து அல்லாதோர் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

திருப்பதி

அதையும் மீறி தேவஸ்தானத்தில் பணிபுரிய வேண்டும் என்றால் மதம் மாற வேண்டும் என்ற புதிய விதியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். வேலை செய்பவர்கள் இந்துக்கள்தானா என்பதை உறுதி செய்ய திருப்பதியில் பணிபுரிவோரின் வீட்டிற்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.