திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.1.11 கோடி நன்கொடை கொடுத்த அம்பானி நிறுவனம்…

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.1.11 கோடி நன்கொடை கொடுத்த அம்பானி நிறுவனம்…

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் டி.டி.டி. அறக்கட்டளையிடம் ரூ.1.11 கோடியை நன்கொடையாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வழங்கியது.

நம் நாட்டில் உள்ள பணக்கார சாமியான திருப்பதி ஏழுமலையானுக்கு தினந்தோறும் குவியும் நன்கொடைகளால் அவரது கஜானா நிரம்பி வழிகிறது. சாமானிய மனிதர்கள் முதல் மெகா கோடீஸ்வரர்கள் வரை திருப்பதி கோயிலில் தங்களது சக்திக்கு தகுந்த மாதிரி நன்கொடையை வழங்கி வருகின்றனர். 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ஆசியாவின் மெகா கோடீஸ்வரான முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரும் திருப்பதி பாலாஜியை அடிக்கடி தரிசனம் செய்ய வருவது வழக்கம். முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன் திருப்பதி கோயிலுக்கு ரூ.1.11 கோடியை நன்கொடையாக வழங்கியது.

திருப்பதி ஏழுமலையான்

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ அன்னபிரசாதம் அறக்கட்டளைக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நன்கொடையாக ரூ.1.11 கோடியை வழங்கியது.  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவின் உறுப்பினருமான பி.எம்.எஸ். பிரசாத் திருமலையில் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சிறப்பு அதிகாரி ஏ.வி. தர்மா ரெட்டியிடம் நன்கொடைக்கான தொகையை டி.டி.யாக கொடுத்தார்.