திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்ரத்தாழ்வார் தீர்த்த வாரி நிகழ்ச்சியில் பக்தர்கள் புனித நீராடினர் 

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்ரத்தாழ்வார் தீர்த்த வாரி நிகழ்ச்சியில் பக்தர்கள் புனித நீராடினர் 

நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான இன்று சக்ரத்தாழ்வார் தீர்த்த வாரி நிகழ்ச்சி லட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ விழாவில் மலையப்ப சுவாமி காலை,மாலை இரண்டு வேளைகளிலும் திருமலையின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருகின்றார்.

tiruppathi

இன்று காலை 7 மணிக்கு தெப்பகுளம் அருகேயுள்ள வராஹி கோயிலில் துப, தீப, ஆராதனைகள் மற்றும் பாரம்பரிய பூஜைகளும் நடைபெற்றது.அதனையடுத்து சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி லட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோயில் தெப்ப குளத்தில் தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

tirupathi

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி முடிந்தவுடன் பக்தர்கள் குளத்தில் புனித நீராடி சாமியை தரிசனம் செய்தனர். கடந்த 9 தினங்களாக நடைபெற்றுவந்த நவராத்திரி பிரமோற்சவ நிகழ்ச்சியில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.இதற்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது . 

tirupathijk

இந்த நவராத்திரி திருவிழா கொண்டாட்டத்தின் பொழுது திருப்பதி உண்டியல் வசூல் பல கோடியை எட்டியிருக்கும் என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர் . சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.