திருப்பதி : அபயங்களை போக்கும் ஆபத்பாந்தவனாக ஏழுமலையான் காட்சி தருகிறார்!

 

திருப்பதி : அபயங்களை போக்கும் ஆபத்பாந்தவனாக ஏழுமலையான் காட்சி தருகிறார்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் மேன்மைகள் பற்றியும் அக்கோயிலில் உள்ள அற்புத ஆற்றல் பற்றியும் இந்த பதிவில் விரிவாக பார்போம்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் திருப்பதி ஊரில் இத்தலம் அமைந்துள்ளது. சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி,விருஷபாத்திரி, நாராயணாத்திரி,வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழ்ந்த இடத்தில் இருப்பதால் இத்தலம் ஏழுமலை என்றும்,இத்தலத்தின் மூலவர் ஏழுமலையான் என்றும் அழைக்கப்படுகிறார்.

thirupathi

இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.சந்திரனின் சக்தி மிகுந்த கோயில் என்பதால் இத்தலத்திற்கு சென்று வந்தால் மனம் நிம்மதி அடைகிறது.இக்கோயிலில் ஸ்ரீராமானுஜர் யந்திரசக்கரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் நம் முன்னோர்கள்.கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும் மேலும் செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தியை உண்டாகும்.

thirupathi

பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது. வாஸ்துப்படி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன.வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் என்றும் செல்வம் மலை போல குவியும் என்றும் பல்வேறு வாஸ்து நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

thiru

 இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.வாஸ்துப்படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தியுடன் அமைந்துள்ளது.

 

thiru thiru

இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான். கலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர்.குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள்.

 நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும் இதனால் உடல் சுறுசுறுப்பு அடைகிறது. சந்திர திசை மற்றும் சந்திர புத்தி  நடப்பவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகார ஸ்தலமாகும். திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்புவாய்ந்த பரிகாரம் ஆகும். 

thi thiru

திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மை உங்களுக்கு கிடைக்கும். திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதினோரு மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம்.

திருப்பதி சென்று வருவதால் மிகவும் நல்ல பலன்கள் கிடைக்கும் ராசி மற்றும் லக்னங்கள்:மேஷம், ரிஷபம்,மிதுனம்,கடகம் , கன்னி,துலாம் ,விருச்சிகம்,மகரம், மீனம் .இந்த லக்னம் மற்றும் ராசிக்காரர்கள் திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்துவர சகல சம்பத்தும் கிடைக்கும்