திருப்பதியில் 10-ம் தேதி துவங்கும் நவராத்திரி விழாவின் நிகழ்ச்சி விவரங்கள்!

 

திருப்பதியில் 10-ம் தேதி துவங்கும் நவராத்திரி விழாவின் நிகழ்ச்சி விவரங்கள்!

திருப்பதியில் வருகின்ற 10 ஆம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இவ்விழாவின் நிகழ்ச்சி விவரங்களை இந்த பதிவில் மிகவும் விரிவாக பார்போம்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடம் தோறும் புரட்டாசி மாதத்தில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டிற்கான நவராத்திரி விழா 10-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது .

thiruppathi

அக்டோபர் 10-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில்  மலையப்ப சுவாமி காலை, மாலை இரண்டு வேளைகளிலும் திருமலையின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலம் வருகிறார். விழா நடைபெறும் நாட்களில் அனைத்து வகையான சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக  திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகள் விவரம்:

10-10-2018 –  இரவு 7 மணிக்கு பெரிய சேஷ வாகன வீதி உலா.

11-10-2018 – காலை 9 மணிக்கு சிறிய சேஷ வாகன வீதி உலா.

இரவு 7 மணிக்கு ஹம்ச (அன்னப்பறவை) வாகன வீதி உலா.

12-10-2018 – காலை 9 மணிக்கு சிம்ம வாகன வீதி உலா.

 இரவு 7 மணிக்கு முத்துப் பந்தல் நிகழ்ச்சி.

13-10-2018 – காலை 9 மணிக்கு கற்பக விருட்ச வாகன வீதி உலா.

இரவு 9  மணிக்கு சர்வ பூபால வாகன வீதி உலா.

14-10-2018 – காலை 9 மணிக்கு  மோகினி அவதாரம் பல்லக்கு வாகன வீதி உலா, இரவு 7 மணிக்கு கருட சேவை.

thiruppathi

15-10-2018 காலை 9 மணிக்கு அனுமன் வாகன வீதி உலா, மாலை 5 மணியளவில் தங்கத் தேரோட்டம், இரவு யானை வாகன வீதிஉலா.

16-10-2018  காலை 9 மணிக்கு  சூர்ய பிரபை வாகன வீதி உலா, இரவு  7 மணிக்கு சந்திர பிரபை வாகன வீதி உலா.

17-10-2018 காலை 7 மணிக்கு தேரோட்டம், இரவு  7 மணிக்கு குதிரை வாகன வீதி உலா. 

18-10-2018  காலை 7 மணிக்கு சக்கர ஸ்நானம், இரவு 7 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு.

பிரம்மோற்சவம் நடைபெறும் இந்த ஒன்பது நாள்களும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்என்பதால் இதற்காக விரிவான ஏற்பாடுகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.