திருப்பதியில் நாளை 5 மணிநேரம் தரிசனம் ரத்து: காரணம் இதுதானாம்!

 

திருப்பதியில் நாளை 5 மணிநேரம் தரிசனம் ரத்து: காரணம்  இதுதானாம்!

காலை 6 மணிமுதல் 11 மணிவரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்படுவதாகத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி: திருமலையில் நாளை  5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்படும் என்று  தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

tirupathi

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும்  செப். 30-ஆம் தேதி முதல் அக். 8-ஆம் தேதி வரை  பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக  நாளை  ஏழுமலையான் கோயில் சுத்தம் செய்யப்படவுள்ளது. இதனால் காலை 6 மணிமுதல் 11 மணிவரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்படுவதாகத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சுத்தம் செய்யும் பணிகள் முடிந்தவுடன் மீண்டும் வழக்கம் போல் தரிசனம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

tirupati

இதனால் நாளை காலை  சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனா உள்ளிட்ட சேவைகள் ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்பட உள்ளது.   திருப்பதி  கோவிலில்  வைகுண்ட ஏகாதசி, உகாதி, ஆனி வார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் ஆகியவற்றிற்கு  முன் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். அதாவது ஆண்டுக்கு நான்கு முறை மட்டுமே இந்த பணி நடப்பது குறிப்பிடத்தக்கது.