திருப்பதியில் உருவாகிறது ஓய்வெடுக்கப் பிரம்மாண்ட அமைவிடம்!

 

திருப்பதியில் உருவாகிறது ஓய்வெடுக்கப் பிரம்மாண்ட அமைவிடம்!

ஆந்திர மாநிலத்தில்  உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற  தலம் திருப்பதி. திருப்பதி ஏழுமலையானைப் பார்க்க  நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை  புரிகின்றனர்.

ஆந்திர மாநிலத்தில்  உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற  தலம் திருப்பதி. திருப்பதி ஏழுமலையானைப் பார்க்க  நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை  புரிகின்றனர். இதில் தேசிய மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்தும் பல பேர் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். 

thirupathi

வெளிநாடுகளிலிருந்து வந்து தரிசனம் செய்யும் பக்தர்களின் வசதிக்காகக் கடந்த 2015 ஆம் ஆண்டு திருப்பதி விமானநிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த டெர்மினலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கருடர் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த டெர்மினலில் ஒரே நேரத்தில் 200 வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் 500 உள்நாட்டுப் பயணிகள் பயன்படுத்தும் அளவில் உருவாக்கப்பட்டது.

thirupathi

இதில், 200 கார்கள் நிறுத்தும் வகையிலான இடம், 18 செக் இன் கவுண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, இந்த விமான நிலையத்திலிருந்து மதுரை, சென்னை, ஐதராபாத், புனே உள்ளிட்ட இடங்களுக்கு விமான சேவைகளும், ஏழுமலையான் கோவிலுக்குப் பேருந்து, கார், டாக்சி உள்ளிட்ட வானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 

thiruparthic

இந்நிலையில், வெளி நாடுகளிலிருந்து வரும் பயணிகள் தங்கி ஓய்வெடுத்து தரிசனம் செய்வதை இன்னும் சிறப்பாக்க 1800 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் ரேணிகுண்டாவில் உள்ள திருப்பதி விமான நிலையத்தில் பிரம்மாண்ட ஓய்வறை அமைக்கப்பட உள்ளது. தற்போது ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவிற்கு சொந்தமாக உள்ள அந்த இடத்தை ஆண்டொன்றுக்கு ரூ.1 வாடகையில் ஆந்திர மாநில கல்வி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்திடம் 15 ஆண்டுகளுக்கு ஒப்படைக்க உள்ளது. அதன் பிறகு அங்கு பிரம்மாண்ட ஓய்வறை அமைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிதாகக் கட்டப்படவுள்ள அந்த பிரம்மாண்ட ஓய்வறை மக்களிடம் பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.