திருப்பதியிலும் இனி மதுகுடிக்கத் தடை ! விரைவில் அமல் !

 

திருப்பதியிலும் இனி மதுகுடிக்கத் தடை ! விரைவில் அமல் !

ஆந்திராவில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளார். முதற்கட்டமாக 1,000 கடைகளை மூடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் ஏழுமலையான் கோயில் இருக்கும் திருமலையில் மதுபானம் விற்கவோ, குடிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மலை அடிவாரமான திருப்பதி நகரத்திலும் மதுபானம் விற்கவோ, குடிக்கவோ தடை விதிக்க திருப்பதி தேவஸ்தான் திட்டமிட்டுள்ளது. 

subbu reddy

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான வாரிய கூட்டத்தில் தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தபோது மதுபானத்திற்கு தடை விதிக்க ஆந்திரமாநில அரசுக்கு கடிதம் எழுதப் போவதாக தெரிவித்தார். மேலும் திருப்பதியையும், திருமலையையும் தனித்தனியே பார்க்க முடியாது என்றும், இரண்டுமே பக்தர்கள் தலம் என்றும் வாதிட்டார்.

alochol

ஏற்கனவே மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கு கொண்டு வர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்ட சுப்பாரெட்டி, இந்த முடிவுக்கு கோயிலுக்கு வரும் கோடிக்கணக்கான பக்தர்கள் ஆதரவு தெரிவிப்பர் என கூறினார். ஏற்கனவே ஆந்திராவில் அக்டோபர் 1 முதல் மதுபான கடைகளை 4,580 லிருந்து 3,450 ஆகக் குறைத்து விட்டது. ஆண்டுக்கு 20% கடைகள் படிப்படியாக கொண்டு வரவும் ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.