திருப்பதிக்கு நடந்து சென்று சாமி தரிசனம் செய்த ஸ்ரீதேவி மகள்! வைரல் போட்டோஸ்!

 

திருப்பதிக்கு நடந்து சென்று சாமி தரிசனம் செய்த ஸ்ரீதேவி மகள்! வைரல் போட்டோஸ்!

விமானப்படை வீராங்கனை குஞ்சன் சேக்சானாவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடித்து வருகிறார்.

ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வியின் அறிமுகப்படமான ‘தடக்’ திரைப்படம் பாலிவுட்டில் வெளியாகியது. தற்போது அவர் விமானப்படை வீராங்கனை குஞ்சன் சேக்சானாவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடித்து வருகிறார்.

 


 

கரண் ஜோகர் இயக்கும் படம் ஒன்றையும் கைவசம் வைத்திருக்கிறார். சமீபகாலமாக ஜான்விகபூர் மிகவும் கவர்ச்சியான ஆடை அணிந்து வருவதாகப் பரவலாக அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. 

ttn

இந்நிலையில் ஜான்வி கபூர் பாவாடை தாவணியில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.

ttn

முன்னதாக திருப்பதி மலைப்பாதையில் அழிபுரி -திருப்பதி வரை நடந்து சென்ற ஜான்வி கபூர் பிறகு  பயபக்தியுடன் சுவாமியை தரிசனம் செய்தார்.  

ttn

இதற்கான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ttn

மறைந்த நடிகையும்  இவரது அம்மாவுமான ஸ்ரீதேவி, இதேபோல் ஆண்டிற்கு ஒருமுறை ஏழுமலையானை தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருந்திருந்து குறிப்பிடத்தக்கது.