திருநங்கை வேடத்தில் மாஸாக நடனம் ஆடும் விஜய் சேதுபதி: வைரல் வீடியோ!

 

திருநங்கை வேடத்தில் மாஸாக நடனம் ஆடும் விஜய் சேதுபதி: வைரல் வீடியோ!

சென்னை: சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்திருக்கும் விஜய்சேதுபதி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கையாக நடித்துள்ளார். அவருடன் பகத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

 

இந்நிலையில் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை நடிகர் விஜய்சேதுபதி அன்று ஒரு நாள் ஷில்பா உடன் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா என்ற தலைப்பில் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா நடிப்பு சொல்லித்தரும் காட்சிகளும், விஜய் சேதுபதி நடனமாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.