திருநங்கை சமூகத்தினரின் திருமண நிகழ்வு; 15 ஜோடிகளுக்கு திருமணம்?

 

திருநங்கை சமூகத்தினரின் திருமண நிகழ்வு; 15 ஜோடிகளுக்கு திருமணம்?

ராய்கார் மேயர் திருநங்கை மது கின்னார், இது நீண்டகாலத்துக்கு முன்பே நிகழ்ந்திருக்க வேண்டும். எங்கள் சுக துக்கங்களை பகிர்ந்துகொள்ள இணை இல்லாமல் வாழ்ந்து வந்தோம். அரசாங்கம் இப்படி ஒரு திட்டத்தை கொண்டு வந்தது பாராட்டத்தக்கது, அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

சட்டிஸ்கர் மாநிலம் ராய்பூரில் திருநங்கை சமூகத்தினருக்காக அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த திருமண நிகழ்வில் 15 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணங்கள் இந்து மத முறைப்படி நடைபெற்றது. ஹல்தி, மெஹந்தி மற்றும் நிச்சயதார்த்தம் ஆகிய நிகழ்வுகள் முன்பே முடிக்கப்பட்டு பின்னர் திருமணம் நடந்தது.

இதுகுறித்து ராய்கார் மேயர் திருநங்கை மது கின்னார், இது நீண்டகாலத்துக்கு முன்பே நிகழ்ந்திருக்க வேண்டும். எங்கள் சுக துக்கங்களை பகிர்ந்துகொள்ள இணை இல்லாமல் வாழ்ந்து வந்தோம். அரசாங்கம் இப்படி ஒரு திட்டத்தை கொண்டு வந்தது பாராட்டத்தக்கது, அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

trans

மேலும் அவர், எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வாழ்க்கை துணை அமைந்திருக்கிறது. இதைவிட வேரு என்ன வேண்டும். இந்தியாவில் இதுபோல் மொத்தமாக திருநங்கைகளுக்கு திருமணம் நடப்பது இதுவே முதன்முறை, பிற்காலத்தில் அனைவராலும் இதனை இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறேன் என்றார். 

grga

இந்த நிகழ்வினை ஒருங்கிணைத்தது ராய்பூரை சேர்ந்து சமூக ஆர்வலர் வித்யா ராஜ்புட். இவரும் திருநங்கை சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருநங்கை சமூகத்தினர் சரியான அங்கீகாரம் பெறுவது சமூக முன்னேற்றத்துக்கு அவசியமான ஒன்றாகும்.

இதையும் வாசிக்க: ஜொமோட்டோ ஊழியரை வேலையை விட்டு நீக்கிய நிறுவனம் : கேஸ் போடுவோம் என்று மிரட்டல்!