திருநங்கைகள் அரசு மருத்துவமனை காவலர்களாக நியமனம்! சுகாதாரத்துறை கலக்கல்!

 

திருநங்கைகள் அரசு மருத்துவமனை காவலர்களாக நியமனம்! சுகாதாரத்துறை கலக்கல்!

தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை சீமாங்க் திட்டத்தின்கீழ் 24 மணி நேரமும் இயங்கும் மகப்பேறு மருத்துவ பிரிவில், ஒப்பந்த அடிப்படையில் காவலர்களை தேர்வு செய்யும் பணியின்கீழ், 8 திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு, பணியாணை ஒப்படைக்கப்பட்டது.

தமிழகத்தில் முதன்முறையாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் 8 திருநங்கைகள் காவலர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் திருநங்கைகள் தங்களுக்கான சமூக அங்கீகாரத்திற்காக போராடி வருகின்றனர். வேலை வாய்ப்புகளில் தங்களுக்கு போதிய உரிமைகள் , கிடைக்கப்பெறுவதில்லை என அவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். அதேநேரம், வாய்ப்பு கிடைக்கும்படத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைக்கவும் அவர்கள் தவறுவதில்லை.

vijay bhaskar

அவர்களுக்கான சமூக அங்கீகாரத்தை வழங்குவது அரசின் கடமைகளில் ஒன்றானபின், அதற்கான முதல்முயற்சியாக தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை சீமாங்க் திட்டத்தின்கீழ் 24 மணி நேரமும் இயங்கும் மகப்பேறு மருத்துவ பிரிவில், ஒப்பந்த அடிப்படையில் காவலர்களை தேர்வு செய்யும் பணியின்கீழ், 8 திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு, பணியாணை ஒப்படைக்கப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இதில் கணிசமான பங்குண்டு. அவருக்கு நமது நன்றியும் வாழ்த்தும்.