திருநங்கைகளையே மிரட்டியே முகமூடி நபர்கள் ! பாதுகாப்பு கேட்டு ஆட்சியரிடம் மனு

 

திருநங்கைகளையே மிரட்டியே முகமூடி நபர்கள் ! பாதுகாப்பு கேட்டு ஆட்சியரிடம் மனு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சகாய நகர் ஊராட்சி மன்றத் தலைவராக திருநங்கை ராபியா என்பவர் போட்டியிடுகிறார். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் பிரச்சாரம் செய்யும்போது மோட்டார் சைக்கிளில் சில இளைஞர்கள் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு வந்து மிரட்டல் விடுத்ப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது திருநங்கை வேட்பாளர் ஒருவரை மர்மநபர்கள் சிலர் மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சகாய நகர் ஊராட்சி மன்றத் தலைவராக திருநங்கை ராபியா என்பவர் போட்டியிடுகிறார். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் பிரச்சாரம் செய்யும்போது மோட்டார் சைக்கிளில் சில இளைஞர்கள் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு வந்து மிரட்டல் விடுப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். இதனால் தனக்கும் தன்னுடன் வருபவர்களுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக ராபியா தெரிவித்துள்ளார். எனவே இந்த மிரட்டல் தான் திருநங்கை என்பதாலும், ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்பதற்காகவும் தான் என தெரிவித்த ராபியா, இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். திருநங்கை ராபியா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்அந்த புகாரில், இதனை தடுத்து நான் முறையாக பரப்புரை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.