திருடுபோனது 13 லட்சம் இந்தியர்களின் டெபிட் – கிரெடிட் கார்டுகளின் விவரங்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!

 

திருடுபோனது  13 லட்சம் இந்தியர்களின் டெபிட் – கிரெடிட் கார்டுகளின் விவரங்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!

கிரெடிட் கார்டுகளின் தகவல்கள் கள்ள மார்க்கெட்டில் விற்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

13 லட்சம் டெபிட் மாற்றும் கிரெடிட் கார்டுகளின் தகவல்கள் கள்ள மார்க்கெட்டில் விற்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

debit

நமது டெபிட் கிரெடிட் கார்டுகளில் உள்ள விபரங்களைத் திருடி  போலி கார்டுகளைத் தயார் செய்வது போன்ற மோசடிகள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது.  அந்த வகையில் 13 லட்சம் டெபிட் மாற்றும் கிரெடிட் கார்டுகளின் தகவல்கள் கள்ள மார்க்கெட்டில் விற்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  ஒரு கார்டு குறித்த தகவலை பெற 7 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதுமாம்.  இப்படி 13 லட்சம் கார்டுகளின் விபரங்கள் திருடப்பட்டுள்ளது. இதில் 98 சதவீதம் இந்தியர்களின் தகவல்கள்  என்று கூறப்படுகிறது. 

hacker

இதுகுறித்து கூறும் ஸிடிநெட்  என்ற அமைப்பு, வங்கிகளின் வழியாக இந்த விபரங்கள் திருடப்பட்டுள்ளதாகவும்,  ஏடிஎம் இயந்திரங்களில் பொருத்தப்பட்டுள்ள ஸ்கிம்மர் கருவிகள் மூலமாகவோ அல்லது பாயின்ட் ஆப் சேல் மூலமாகவோ இணையதளங்கள் சிலவற்றிற்கு இந்த தகவல்கள் விற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.