திருடிய டெபிட் கார்டில் வாங்கிய லாட்டரிக்கு கோடிக்கணக்கில் பரிசு! ஆனா பரிசு கிடைக்கலையே!

 

திருடிய டெபிட் கார்டில் வாங்கிய லாட்டரிக்கு கோடிக்கணக்கில் பரிசு! ஆனா பரிசு கிடைக்கலையே!

சிறுசிறு குற்றங்கள் செய்து அடிக்கடி ஜெயிலுக்குச் செல்பவர்தான் குட்ரம். குட்ரமுக்கு வாட்சன் என்ற பெயரில் நண்பனுண்டு. உன் நண்பன் யார் எனச் சொல், நீ யார் என்பதைச் சொல்கிறேன் என்ற காந்தி மொழியையும் மேலே சொன்ன மூன்று பழமொழிகளுடன் சேர்த்துக்கொள்ளவும். யெஸ். வாட்சனும் பகுதிநேர ஜெயில் பறவைதான்.

குடுக்குற தெய்வம் கூரையை பிச்சுக்கிட்டு குடுக்கும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை, அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் – இந்த மூன்று பழமொழிகளும் பகுதிவாரியாக இந்த செய்திக்குப் பொருந்தும். இங்கிலாந்தின் போல்டன் நகரைச் சேர்ந்தவர் மார்க் குட்ரம். இவர் பிறந்தவுடன் பல ஜோசியர்களிடம் விவாதித்து பொருத்தமான பெயராக சூட்டியிருக்கிறார்கள் குட்ரமின் பெற்றோர். பெயரிலேயே அவர் தொழில் என்னவென்று தெரிந்துகொள்ளலாம். சிறுசிறு குற்றங்கள் செய்து அடிக்கடி ஜெயிலுக்குச் செல்பவர்தான் குட்ரம். குட்ரமுக்கு வாட்சன் என்ற பெயரில் நண்பனுண்டு. உன் நண்பன் யார் எனச் சொல், நீ யார் என்பதைச் சொல்கிறேன் என்ற காந்தி மொழியையும் மேலே சொன்ன மூன்று பழமொழிகளுடன் சேர்த்துக்கொள்ளவும். யெஸ். வாட்சனும் பகுதிநேர ஜெயில் பறவைதான்.

Mark and Watson

முதல் பழமொழிக்கான பொழிப்புரை: குட்ரமும் வாட்சனும் இணைந்து டெபிட் கார்ட் ஒன்றுமூலம் லாட்டரி சீட்டு வாங்க, இவர்கள் அதிர்ஷ்டம் 4 மில்லியன் பவுண்டு பரிசு விழுந்துவிட்டது இவர்கள் வாங்கிய சீட்டுக்கு. இரண்டாவது பழமொழி: லாட்டரி சீட்டு வாங்க இவர்கள் பயன்படுத்திய டெபிட் கார்ட்கூட யாரிடமோ ஆட்டைய போட்டதுதான். எனவே, பரிசுத்தொகையை நிறுத்திவைத்துவிட்டார்கள். மூன்றாவது: ஏற்கெனவே பரிசுத்தொகையை அடைய முடியாத சோகத்தில் இருக்கும் வாட்சனுக்கு அடுத்த இக்கட்டு, கடந்த மாதம் உணவகத்தில் நடந்த தகராறில் வாட்சன் 200 பவுண்டுகள் அபராதம் செலுத்த வேண்டுமென நீதிமன்றதம் உத்தரவிட்டுள்ளது. கூரையை பிச்சுகிட்டு கொட்டியும் வாய்க்கு எட்டாமல் தெய்வம் நின்று கொன்றுவிட்டது. மூணு பழமொழியும் சிங்க் ஆகிடுச்சா?