திருடனை விமானத்தில் துரத்தி பிடித்த பெங்களூரு போலீசார்! குவியும் பாராட்டு!

திருடனை விமானத்தில் துரத்தி பிடித்த பெங்களூரு போலீசார்! குவியும் பாராட்டு!

பணத்தின் மீதான ஆசையால், தனிமையான சூழலும், சந்தர்ப்பமும் சாதாரண மனிதனையும் குற்றம் செய்ய வைத்து விடுகிறது. ராஜஸ்தானில் வசித்து வருபவர் குஷால் சிங். பெரிய பெரிய பங்களா வீடுகளை சுத்தம் செய்யும் பணியைச் செய்து வந்தார். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூருவில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் மெஹக் வீட்டை சுத்தம் செய்வதற்கு குஷால் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

வீட்டை குஷால் சிங் சுத்தம் செய்துக் கொண்டிருந்த போது, மெஹக் தனது குடும்பத்தினருடன் துணிக்கடைக்குச் சென்றிருக்கிறார். வெளியே செல்லும் போது குஷால் சிங்கிடம் வீட்டை சுத்தம் செய்துக் கொண்டிருங்கள். இரண்டு மணி நேரத்தில் வந்து விடுவோம் என்று சொல்லி சென்றுள்ளார். இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டுள்ள குஷால் சிங், மெஹக் வீட்டில் உள்ள லாக்கரைத் திறந்து அதில் இருந்த நகைகளைக் கொள்ளையடித்து விட்டு, எதுவும் நடக்காதது போல சந்தேகம் எழாதவாறு மீண்டும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

kushal singh

மெஹக் திரும்பியதும், அன்று மாலை சுத்தம் செய்யும் வேலையை முடித்து விட்டு. அதற்கான கூலியையும் வாங்கிக் கொண்டு ராஜஸ்தானுக்கு கிளம்பிவிட்டார். அதன்பின், தீபாவளியன்று பூஜையில் நகைகளை வைத்து வழிபடுவதற்காக லாக்கரை திறந்த மெஹக் நகைகள் திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின், காவல்துறையிலும் புகார் தெரிவித்தார்.  போலீசாரின் விசாரணையில், குஷால் பெங்களூரு – அஜ்மர் ரயிலில் ராஜஸ்தான் சென்று கொண்டிருப்பதை அறிந்தனர். அந்த ரயில் ராஜஸ்தான் செல்வதற்கு மூன்று நாட்கள் ஆகும் என்பது தெரிந்ததும் போலீசார்  உடனடியாக விமானத்தில் ராஜஸ்தான் சென்றனர். சாவகாசமாக கைநிறைய நகைகளுடன் ராஜஸ்தான் ரயில் நிலையத்தில் இறங்கிய குஷாலுக்கு அதிர்ச்சியளித்தனர் பெங்களூரு போலீசார். அதன் பின்னர், குஷாலிடம் இருந்து நகைகளை மீட்டனர்.