திருச்செங்கோட்டிலிருந்து திருப்பதிக்கு 9 டன் பூமாலைகள்!

 

திருச்செங்கோட்டிலிருந்து திருப்பதிக்கு 9 டன் பூமாலைகள்!

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவுக்கு திருச்செங்கோட்டில் இருந்து 9 டன் மலர்கள் அனுப்பப்படுகிறது

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் எழுமலையான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோயிலில்  ஆண்டுதோறும்  நவராத்திரி  பிரம்மோற்சவ  விழா  வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது  வழக்கம். 

thiruppathikl

அதேபோல் இந்த ஆண்டிற்கான  நவராத்திரி  பிரம்மோற்சவ விழா 10 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவுக்காக திருச்செங்கோட்டில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் மலர்கள் அனுப்பப்படுகிறது.

 அதேபோல், இந்த ஆண்டும் மலர்கள் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்செங்கோடு திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் சார்பில் பூமாலைகள் தொடுக்கப்பட்டது. 

9 டன் எடையுள்ள மணமுள்ள மலர்களை மாலையாக தொடுக்கும் நிகழ்ச்சி  திருச்செங்கோட்டில்  நடைபெற்று வருகிறது. திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பூக்களை மாலைகளாக தொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

thiruppthikk

பக்தர்கள் வழங்கிய சம்பங்கி, மஞ்சள்,சிவப்பு சாமந்தி பூக்கள், தாமரை. மரிக்கொழுந்து உள்ளிட்ட, ஐந்து டன் எடையுள்ள பல வண்ண பூக்களை, மாலைகளாக தொடுத்து சிறப்பு பூஜைகள் செய்து திருமலைக்கு அனுப்புகின்றனர்.

மேலும் கரும்பு, தென்னம்பாளை, தென்னங்குருத்து, இளநீர், பாக்கு குழைகள், மாங்கொத்துகள், பத்தாயிரம் ரோஜா செடிகள் ஆகியவையும் திருச்செங்கோட்டில் இருந்து அனுப்பப்படுகின்றது.

இந்நிகழ்வில் 800 க்கும்  மேற்பட்ட பண்கள் கலந்துகொண்டு மலர் மாலைகளை தொடுத்தனர்.