தியனன்மென் முதல் ஹாங்காங் வரை! அந்நிய சக்திகளின் சதி என்கின்றன சீன செய்தித்தாள்கள்

 

தியனன்மென் முதல் ஹாங்காங் வரை! அந்நிய சக்திகளின் சதி என்கின்றன சீன செய்தித்தாள்கள்

குற்றமிழைத்தவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி,அங்கு விசாரித்து தண்டிக்க வகை செய்யும் சட்டத்தை கொண்டுவரப் போகிறது ஹாங்காங் அரசு.இதைத் தொடர்ந்து, அங்கே பத்து லட்சத்துக்கும் மேலான மக்கள் தாங்களாகவே திரண்டு தெருவிற்கு வந்திருக்கிறார்கள்.

குற்றமிழைத்தவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி,அங்கு விசாரித்து தண்டிக்க வகை செய்யும் சட்டத்தை கொண்டுவரப் போகிறது ஹாங்காங் அரசு.இதைத் தொடர்ந்து, அங்கே பத்து லட்சத்துக்கும் மேலான மக்கள் தாங்களாகவே திரண்டு தெருவிற்கு வந்திருக்கிறார்கள்.

hongkong

மற்றொரு பக்கம்,கலவரத் தடுப்பு போலீஸ் எதற்கும் தயாராக… ஹாங்காங் பார்லிமெண்ட் கட்டிடத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டு இருக்கிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள்  தியனன்மென் சதுக்கத்தில் திரண்ட போராட்டத்தில் ராணுவ டாங்கி களை அனுப்பி அழித்தது போல,ஏதேனும் விபரீதம் நடக்கலாம் என உலகமே பதட்டத்துடன் ஹாங்காங்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது. 

இந்த நிலையில் உள்ளூர் பத்திரிகையான குளோப் இது அந்நிய சக்திகளின் சதி என்கிறது. மெயின்லேண்ட் என்று அழைக்கப்படும் சீனாவில் இருந்து குற்றவாளிகள் தப்பிவந்து ஹாங்காங்கில் தங்கிவிடுகிறார்கள்.அவர்களை கட்டுப்படுத்தத்தான் இந்தச் சட்டம் என்று ஹாங்காங்கில் இந்தச் சட்டத்துக்கு ஆதரவாக இருக்கும் அரசியல்வாதிகள் சொல்கிறார்கள்.

hongkong

ஆனால், அவர்களின் எதிர் தரப்பினரோ சீனக்கோர்ட்டுகள் வெளிப்படைத் தண்மையற்றவை.இங்கிருந்து ஒருவரை கைது  செய்து கொண்டுபோய் விட்டால் யாரும் அவருடன் தொடர்புகொள்ள முடியாது.அவரும் வெளியுலகுக்கு தனக்கு நேர்ந்ததைச் சொல்ல முடியாது என்கிறார்கள்!

சீனாவில் இருக்கும் கம்யூனிஸ்டு தலைவர்கள் அனைவரும் இந்தச் சட்டத்தை ஒரு மனதாக ஆதரிக்கிறார்கள்.அதனாலேயே ஹாங்காங் மக்கள் இந்தச் சட்டத்தை சந்தேகிக்கின்றன.இப்போது எங்களை ஆண்டுகொண்டு இருப்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல; சீனாவால் நியமிக்கப் பட்டவர்கள்.இவர்கள் சீனா என்ன சொன்னாலும் அதை செய்ய தயாராக இருப்பார்கள் என்கிறது இந்தச் சட்டத்தை எதிர்க்கும் அணி.

hongkong

பிரிட்டனின் காலணியாக இருந்த காலத்தில் துவங்கி இன்று வரை ஹாங்காங் ஆசிய பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான கேந்திரமாக இருக்கிறது.
இதனால் அந்த நகருக்கு ஏற்படும் பாதிப்பு ஒட்டு மொத்த தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்தையும் பாதிக்கும் என்பதே…இப்போது,உலகின் கவலையாக இருக்கிற