திமுக – மதிமுக கூட்டணியில் கீறல் ஏற்படுத்த முடியாது: வைகோ அதிரடி

 

திமுக – மதிமுக கூட்டணியில் கீறல் ஏற்படுத்த முடியாது: வைகோ அதிரடி

திமுக – மதிமுக கூட்டணியில் யாராலும் அணு அளவுக்கூட கீறல் ஏற்படுத்த முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னை: திமுக – மதிமுக கூட்டணியில் யாராலும் அணு அளவுக்கூட கீறல் ஏற்படுத்த முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

திமுகவை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கடுமையாக விமர்சித்து வந்த வைகோ சமீபகாலமாக அக்கட்சியுடன் மிகவும் இணக்கமாக சென்று கொண்டிருக்கிறார். மேலும் எந்த தேர்தல் வந்தாலும் திமுகவுடன்தான் கூட்டணி எனவும் கூறிய அவர் ஸ்டாலினை முதல்வராக்காமல் ஓய மாட்டேன் எனவும் சபதம் எடுத்திருக்கிறார்.  

இதற்கிடையே, கடந்த சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியடைய வைகோ அமைத்த அணிதான் காரணம் என சில திமுகவினர் நினைப்பதாகவும், எனவே அவர் மீது வருத்தத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.  மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், வைகோ மீது ஸ்டாலின் கோபமாக இருக்கிறார் என சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னை எழும்பூர் உள்ள சிராஜ் மஹாலில் ஷமா அக்துல் உலமா சபை சார்பில் நடைபெற்ற நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில்  பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திமுக தலைமையிலான அணியில்தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். திமுக – மதிமுக கூட்டணி இடையே யாராலும் சிறிய அணு அளவுக்கூட கீறல் ஏற்படுத்த முடியாது என்றார்.