திமுக பேரணியில் பங்கேற்ற 14,000 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்..காவல்துறை அதிரடி !

திமுக பேரணியில் பங்கேற்ற 14,000 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்..காவல்துறை அதிரடி !

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து சமீபத்தில் திமுக சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து சமீபத்தில் திமுக சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.

ttnn

இது தொடர்பாக எழுந்த வழக்கில், ஜனநாயக நாட்டில் உரிமைக்காக நடத்தும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் பேரணியை கேமராக்கள் மூலம் கண்காணித்து அந்த காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. அதன் படி, 110 கேமராக்கள் மூலம் திமுக பேரணி கண்காணிக்கப் பட்டு அந்த காட்சிகளை காவல்துறை பதிவு செய்தது. 

ttn

இது தொடர்பாக மீண்டும் எழுந்த வழக்கில், காவல்துறை திமுக பேரணியின் வீடியோ காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்தது. அதனையடுத்து, தடையை மீறி பேரணியில் பங்கேற்ற சுமார் 14 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் சட்டரீதியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அந்த பேரணி தொடர்பான அனைத்து வழக்கையும் முடித்து வைத்துள்ளனர்.