திமுக ஜெயித்த ஒன்றியங்களுக்கு  நாங்க கொஞ்சமாத்தான் நிதி கொடுப்போம்.

திமுக ஜெயித்த ஒன்றியங்களுக்கு  நாங்க கொஞ்சமாத்தான் நிதி கொடுப்போம்.

ஈரோடுமாவட்ட புறநகர் செயலாளராகவும்,தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் இருப்பவர் கருப்பண்ணன். உள்ளூர் எதிரிகள்,பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் தலைமையில் அணிசேர்ந்து இவரது பதவிக்கு உலைவைக்க பலவிதமான குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள்.

karuppannan

அவை,விழாவில் குத்தாட்டம் போட்டது முதல், உள்ளாட்சி தேர்தலில் கள்ளாட்டம் ஆடி, அதிமுகவின் வெற்றியை தடுத்தது வரை பலவகைப்படும். ஆனால், அமைச்சர் கருப்பண்ணன் இது எதையுமே கவலைப்படாமல், தன் போக்கில் அதிரடி அரசியல் செய்து வருகிறார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நேற்று அமைச்சர் கருப்பண்ணன் தலைமையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பேசிய அமைச்சர் கருப்பண்ணன், அதிமுகவில் ஒற்றுமை இல்லாததால் சில ஒன்றியங்களில் திமுக ஜெயித்தது வருத்தமளிக்கிறது.ஆனால்,அங்கே வெற்றிபெற்றிருக்கும் திமுக அந்த ஒன்றியங்களில் ஒன்றும் சாதிக்க முடியாது.எந்த விதமான நலத்திட்டங்களையும் நிறைவேற்ற முடியாது.அதற்குப் போதுமான நிதி 
கொடுக்க மாட்டோம்.
கொஞ்சமாகத்தான் கொடுப்போம்.அதை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது அவர்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று பேசி,சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார். இது விரைவில் நீதிமன்றம் போகும் என்று தெரிகிறது. விடை பெரும்போது,உள்ளாட்சித் தேர்தலில் சில இடங்களை இழந்திருந்தாலும்,சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெருவோம் என்றார்.ரஜினி குறித்த கேள்விகளுக்கு சிரித்தபடியே ‘ ரஜினிய எல்லாம்,யாரும் சீரியசா எடுத்துக்க மாட்டாங்க’ என்று பதிலளித்தார் கருப்பண்ணன்.