திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப்பெற்றவர்கள் தனியார் சொகுசு விடுதிக்கு கடத்தல்!

 

திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப்பெற்றவர்கள் தனியார் சொகுசு விடுதிக்கு கடத்தல்!

மதுரையில் திமுக சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் என மொத்தம் 109 பேர் புதுச்சேரியில் தனியார் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மதுரையில் திமுக சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் என மொத்தம் 109 பேர் புதுச்சேரியில் தனியார் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மாவட்ட குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான  91,975 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில்  76.19 %  வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகளும் பதிவாகியது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கி நேற்று மாலைவரை நடைபெற்றது.  இதில் திமுக கூட்டணி மாவட்ட கவுன்சிலர் பதவியிலும், ஊராட்சி ஒன்றியத்துக்கான பதவிகளிலும் அதிகமான வாக்குகள் வெற்றி வெற்றிப்பெற்றது. 

v

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 92 திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் , 5 காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும்  12 திமுக மாவட்ட கவுன்சிலர்களை திமுகவின் மதுரை புறநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி , மணிமாறன் ஆகியோர் புதுச்சேரிக்கு அழைத்து சென்று தனியார் சொகுசு தங்கும் விடுதியில் தங்க வைத்துள்ளனர். 

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற பின்னர் கட்சியின் தலைமை உத்தரவின் பேரில் புதுச்சேரியில் உள்ள தனியார் சொகுசு தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அதிமுகவினர் தங்களது கட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர்களை பணத்தை கொடுத்து அவர்களது பக்கம் இழுத்துவிடுவார்கள் என்ற அச்சத்தினால் இந்த நடவடிக்கையில் திமுக ஈடுபட்டுள்ளது