திமுக எம்.எல்.ஏ-வை பார்த்தவுடன் பதறிய அதிமுக அமைச்சர்கள்: வைரலாகும் வீடியோ

 

திமுக எம்.எல்.ஏ-வை பார்த்தவுடன் பதறிய அதிமுக அமைச்சர்கள்: வைரலாகும் வீடியோ

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பார்த்தவுடன் இரண்டு அமைச்சர்கள் எழுந்து நிற்பது போன்ற வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருச்சி: திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பார்த்தவுடன் இரண்டு அமைச்சர்கள் எழுந்து நிற்பது போன்ற வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருச்சி மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 15-ஆம் தேதியன்று அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கமிஷனரை சந்தித்து மனு கொடுப்பதற்காக திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அங்கு வந்துள்ளார். ஆனால், அமைச்சர்கள் ஆய்வில் ஈடுபட்டிருந்ததால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அன்பில் மகேஷ் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.   

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த அன்பில் மகேஷ், தன் படை சூழ ஆய்வு நடைபெற்ற அறைக்குள் சென்றுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அமைச்சர்கள், அன்பில் மகேஷை பார்த்தவுடன் எழுந்து நின்று வரவேற்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தாத்தா அன்பில் தர்மலிங்கம் தமிழக முன்னாள் அமைச்சராக பணியாற்றியுள்ளார். அவரின் தந்தை அன்பில் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

அதுமட்டுமின்றி திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியும், அன்பில் தர்மலிங்கமும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். அதேபோல், அன்பில் பொய்யாமொழியும், திமுக தலைவர் ஸ்டாலினும் நெருங்கிய நண்பர்களாக அறியப்பட்டனர். தற்போது மகேஷும், உதயநிதியும் நண்பர்களாக இருக்கின்றனர்.

அந்த வகையில், திமுக தலைமையுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாலேயே அவரை பார்த்தவுடன் அமைச்சர்கள் பதறியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.