திமுக ஆட்சியைப் பிடித்ததும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்: முக ஸ்டாலின் பிரச்சாரம்..

 

திமுக ஆட்சியைப் பிடித்ததும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்: முக ஸ்டாலின் பிரச்சாரம்..

தேர்தல் நடைபெற இன்னும் கொஞ்சம் நாட்களே இருக்கும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வரும் 21 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் பின், தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் நடைபெற இன்னும் கொஞ்சம் நாட்களே இருக்கும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

முக ஸ்டாலின்

காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் நாங்குநேரியில் இன்று பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தில் பேசிய முக ஸ்டாலின், திமுக ஆட்சியில் செயல்படுத்தப் பட்ட மகளிர் சுய உதவிக்குழு கடனுக்கு தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுக அதிக வட்டி விதித்ததால் பல பிரச்சனைகளைப் பெண்கள் சந்திக்கின்றனர். ஆட்சியில் உள்ள கட்சி செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் நாங்கள் செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார். 

முக ஸ்டாலின்

மேலும், அதிமுக ஆட்சியில் தான் தண்ணீர் பஞ்சம், பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை என அனைத்தும் நிகழ்ந்துள்ளது. இதனை எதையும் பொருட்படுத்தாமல் 8 வருடமாக அதிமுக ஆட்சி நடத்தி வருகிறது என்றும் இன்னும் நடத்தப் படாமல் இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நடத்தப்படும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரி தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.