திமுக, அமமுகவில் களம் காணும் பெரிய தலைகள்; தாக்குபிடிப்பாரா ஓபிஎஸ் மகன்?!

திமுக, அமமுகவில் களம் காணும் பெரிய தலைகள்; தாக்குபிடிப்பாரா ஓபிஎஸ் மகன்?!

தேனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத்க்கு எதிராக அமமுக, திமுக தரப்பு இரு பெரிய தலைகளை களமிறக்குகிறது. அரசியல் கத்துக்குட்டி ரவீந்திரநாத் இந்த தேர்தலில் வெற்றிபெற மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.

அமமுக – தங்க தமிழ்ச்செல்வன்

thanga thamizhselvan

தங்க தமிழ்த் செல்வன் தேனி தொகுதியில் மிகுந்த செல்வாக்கு உடையவர். தேனி தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டியில் இரு முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர். ஜெயலலிதாவுக்கு நெருக்கமான அதிமுக ஆளுமைகளில் தங்கத் தமிழ்ச்செல்வன் முக்கியமான நபர் ஆவார். எடப்பாடி பழனிசாமி தரப்பின் மேல் உள்ள அதிருப்தியால் டிடிவி அணியில் இணைந்திருக்கிறார். ரவீந்திரநாத் இப்போதுதான் முதல்முறையாக தேர்தல் களம் காண்கிறார். தங்க தமிழ்ச்செல்வனின் செல்வாக்கு ஒருபுறம் இருக்க, டிடிவி தினகரனுக்கும் தேனியில் பெரிய அளவில் மக்கள் ஆதரவு உண்டு. எனவே ரவீந்திரநாத் நிலைமை கொஞ்சம் சிரமம்தான்.

திமுக – ஜே. எம். ஆரூண் ரசீத் (காங்கிரசு)

j m haroon

தேனி தொகுதியை திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் ஜே. எம். ஆரூண் ரசீத் நிறுத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தேனி மக்களவை தொகுதியில் ஆரூண் ரசீத்க்கு அதிகமான மக்கள் ஆதரவு உண்டு. மக்களவை தேர்தலில் தொடர்ந்து இரண்டு முறை இதே தொகுதியில் வெற்றிபெற்றவர்.

ரவீந்திரநாத் குமார் 

ravindranath kumar

இப்படி மக்கள் ஆதரவு பெற்ற முக்கியமான தலைவர்கள் களம் காணும் தேனி தொகுதியில்தான் ரவீந்திரநாத் முதன்முறையாக தேர்தல் களம் காணுகிறார். இவர்களோடு போட்டியிட்டு ரவீந்திரநாத் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு, இதனால் ஓபிஎஸ் தரப்பு தீவிரமாக தேர்தல் பணி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.