திமுகவை காப்பியடிக்கும் கமல்?!..

 

திமுகவை காப்பியடிக்கும் கமல்?!..

திமுக தன்னை காப்பியடிப்பதாக கூறிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தொடர்ந்து திமுகவை காப்பியடித்து வருகிறார்.

சென்னை: திமுக தன்னை காப்பியடிப்பதாக கூறிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தொடர்ந்து திமுகவை காப்பியடித்து வருகிறார்.

ஊழல் ஒழிய வேண்டும் என்ற தாரக மந்திரத்தோடு அரசியலில் களமிறங்கிய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி செயல்பட்டு வருகிறார். முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆசி பெற்று அரசியல் பயணத்தை துவங்கிய கமல், சமீப காலமாக திமுகவை கடுமையாக விமர்சிக்க துவங்கியுள்ளார். விமர்சிப்பதோடு நில்லாமல், திமுகவை காப்பியடித்து அவர் செய்யும் செயல்களை திமுக தன்னை காப்பியடிப்பதாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

kamal

கிராம சபை கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யும் கமல், திமுக அதனை நீண்டகாலமாக செய்து வருது தெரியாமல் தன்னை காப்பியடிப்பதாக குற்றம் சாட்டினார். இதற்கு திமுக தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்ததோடு, கிராம சபை கூட்டங்கள் நடத்திய ஆதாரமும் காட்டப்பட்டது. இந்நிலையில் திமுக போல பிரச்சார முறையை கையாள இருக்கிறது கமல் தரப்பு. 

kamalhassan

கேரவேன் மற்றும் வேன்களை ரெடி செய்து ஊர் ஊராக பிரச்சாரம் திமுகவின் வழக்கம், திமுகவை தொடர்ந்து இதனை பல கட்சிகள் தமிழகத்தில் பின்பற்றத் துவங்கின. தற்போது கமல் தரப்பு இதே பாணியில் டிஜிட்டல் வேனை ரெடி செய்து பிரச்சாரம் செய்யவுள்ளனர்.