திமுகவுக்கு செல்லவில்லை: பழனியப்பன் விளக்கம்

 

திமுகவுக்கு செல்லவில்லை: பழனியப்பன் விளக்கம்

நான் திமுகவில் இணைய இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என பாப்பிரெட்டிப்பட்டியின் முன்னாள் எம்.எல்.ஏ பழனியப்பன் விளக்கமளித்துள்ளார்.

தருமபுரி: நான் திமுகவில் இணைய இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என பாப்பிரெட்டிப்பட்டியின் முன்னாள் எம்.எல்.ஏ பழனியப்பன் விளக்கமளித்துள்ளார்.

டிடிவி தினகரன் ஆதரவாளரும், பாப்பிரெட்டிபட்டி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான பழனியப்பனும், செந்தில் பாலாஜியும் திமுகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகின. இதனால் தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. அந்த தொகுதிகளில் தேர்தலுக்கான பணிகளை தொடக்கப்பட்டது. அதில் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு வருகிறது. அவர்கள் உறுப்பினர்கள் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு தொகுதிக்கு 70 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். நான் தி.மு.க.வில் இணைய திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. நான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காலத்தில் இருந்து அ.தி.மு.க.வின் உண்மை தொண்டனாக இருந்து வருகிறேன். அதன் பின் அதிமுகவை சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் வழி நடத்த முடியும் என்கின்ற நம்பிக்கையில் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

அமமுக. கட்சியில் சிறப்பாக பணியாற்றுவதால் அதனை பொறுத்து கொள்ளாத சிலர் என் மீது கலங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் உளவுத்துறை உதவியுடன் இது போன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதை யாரும் நம்ப வேண்டாம். நான் என்றும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் உண்மை தொண்டன். தற்போது ஆட்சியாளர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மக்களுக்கு நன்றாக தெரியும். ஜெயலலிதா கொண்டு வந்த தொலைதூர திட்டங்கள் எதுவும் இந்த ஆட்சியில் இல்லை. தற்போது தமிழ்நாட்டில் மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதைதான் ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர் என்றார்.