திமுகவின் சேலம் கிழக்கு, மேற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு!

 

திமுகவின் சேலம் கிழக்கு, மேற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு!

சேலம் மேற்கு மற்றும் நாமக்கல் கிழக்கு ஆகிய பகுதிகளுக்கு புதிய  நிர்வாகிகளை நியமித்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

திமுகவின் சேலம் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக இருந்த வீரபாண்டி ராஜா அந்த பொறுப்பிலிருந்து விலகியதால் சேலம் கிழக்கு, சேலம் மேற்கு மற்றும் நாமக்கல் கிழக்கு ஆகிய பகுதிகளுக்கு புதிய  நிர்வாகிகளை நியமித்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், “சேலம் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா அவர்கள் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.எஸ்.ஆர் சிவலிங்கம் அவர்கள் சேலம் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப் படுகிறார்.

TTN

சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தான் அவருக்குப் பதிலாக கழக தேர்தல் பணிக்குழு செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த திரு.டி.எம்.செல்வகணபதி அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு சேலம் மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப் படுகிறார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் காந்தி செல்வன் அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக திரு கே ஆர் என் ராஜேஷ்குமார் அவர்கள் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப் படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் அவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.”  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.