திமுகவினர் வந்த கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. 5 அதிமுக உறுப்பினர்கள் கைது !

திமுகவினர் வந்த கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. 5 அதிமுக உறுப்பினர்கள் கைது !

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கமுதி  ஒன்றியக் கவுன்சிலர் தேர்தலில் அதிமுக கூட்டணி 9 இடங்களிலும், திமுக 7 இடங்களிலும் வெற்றி பெற்றது. 

3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கடந்த 6 ஆம் தேதி பதவியேற்றனர். இந்த முறை ஊராட்சிகளில் அதிக சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதே போல, 
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கமுதி  ஒன்றியக் கவுன்சிலர் தேர்தலில் அதிமுக கூட்டணி 9 இடங்களிலும், திமுக 7 இடங்களிலும் வெற்றி பெற்றது. 

ttn

இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த நபர்கள் 1 தேமுதிக மற்றும் 2 சுயேச்சை உள்ளிட்ட 10 கவுன்சிலர்களை அழைத்துச் சென்று  புதுக்குறிச்சி என்னும் கிராமத்தில் உள்ள ஒருவரது வீட்டில் தங்கவைத்துள்ளனர். இதனை அறிந்த அதிமுகவினர், கூட்டணிக் கட்சியான தேமுதிக வேட்பாளரை அழைக்கச் சென்றுள்ளனர். அப்போது, திமுக மற்றும் அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

tn

அதில் அதிமுகவினர் திமுகவினர் வந்த கார்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதால் 4 கார்கள் சேதம் அடைந்துள்ளன.  மேலும், ஒருவர் படுகாயம் அடைந்ததால் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.