தினமும் குறிப்பிட்ட நேரம் தூங்கி எழுந்தால் இதயத்துக்கு நல்லதாம்!

தினமும் குறிப்பிட்ட நேரம் தூங்கி எழுந்தால் இதயத்துக்கு நல்லதாம்!

தொலைக்காட்சி வருவதற்கு முன்பு இரவு 7 மணிக்கு முன்பு இரவு உணவை முடித்துவிட்டு 8 மணிக்கு எல்லாம் தூங்கச் சென்றுவிடுவது பல குடும்பங்களின் பழக்கமாக இருந்தது. டி.வி, இன்டர்நெட், ஸ்மார்ட் போன் வருகைக்குப் பிறகு தூக்கம் என்பது 11, 12 மணிக்குப் பிறகு என்ற நிலை வந்துவிட்டது. ஒரு மனிதனுக்கு சராசரியாக 8 மணி நேரம் நல்ல தூக்கம் வேண்டும். அப்போதுதான் உடல் புத்துணர்வு அடையும். அதுவும் குறிப்பிட்ட நேரத்துக்கு சரியாக தூங்க சென்றுவிட வேண்டும் என்று கூறுவார்கள்.

தினமும் குறிப்பிட்ட நேரம் படுக்கைக்குச் சென்று தூங்குவது இதயம் உள்ளிட்ட உள் உறுப்புகளுக்கு நன்மை தரும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
தொலைக்காட்சி வருவதற்கு முன்பு இரவு 7 மணிக்கு முன்பு இரவு உணவை முடித்துவிட்டு 8 மணிக்கு எல்லாம் தூங்கச் சென்றுவிடுவது பல குடும்பங்களின் பழக்கமாக இருந்தது. டி.வி, இன்டர்நெட், ஸ்மார்ட் போன் வருகைக்குப் பிறகு தூக்கம் என்பது 11, 12 மணிக்குப் பிறகு என்ற நிலை வந்துவிட்டது. ஒரு மனிதனுக்கு சராசரியாக 8 மணி நேரம் நல்ல தூக்கம் வேண்டும். அப்போதுதான் உடல் புத்துணர்வு அடையும். அதுவும் குறிப்பிட்ட நேரத்துக்கு சரியாக தூங்க சென்றுவிட வேண்டும் என்று கூறுவார்கள்.

waking-up-morning

இப்படி சரியான நேரத்துக்கு தூங்கச் செல்வது இதய நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை போக்க உதவும் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது. நாட்டர்டாம் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் 557 கல்லூரி மாணவர்களிடம் நான்கு ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் தூங்க செல்லும் நேரம், தூங்கும் நேரம் என அனைத்தையும் குறித்துக் கொண்டனர். 10 மணிக்கு தூங்கச் செல்லும் பழக்கம் உள்ளவர்களை 10.30க்கு தூங்க செய்துள்ளனர். மேலும், தூங்கச் செல்லும் நேரத்தை மாற்றி மாற்றிப் பார்த்து பரிசோதித்துள்ளனர்.

waking-up-98

இயல்பான நேரத்துக்கு பதில் கூடுதலாக அரை மணி நேரம் கழித்து தூங்கச் சென்றவர்களுக்கு இதயத் துடிப்பில் மாறுதல் இருப்பதை இவர்கள் கண்டறிந்துள்ளனர். இதயத் துடிப்பு அதிகரிக்கிறது என்றால் அது இதய நோயில் கொண்டுபோய்விடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, தினமும் டி.வி, செல்போனில் ஆழ்ந்திருக்காமல் இரவு 9 மணிக்கு எல்லாம் தூங்கச் செல்வோம். 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுவோம். புத்துணர்வோடு நம்முடைய வேலையைத் தொடர்வோம்.