தினகரன் இல்லாமல் அதிமுகவுடன் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி

 

தினகரன் இல்லாமல் அதிமுகவுடன் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி

டிடிவி தினகரன் இல்லாமல் அதிமுகவுடன் இணைய முடியாது என தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

சென்னை: டிடிவி தினகரன் இல்லாமல் அதிமுகவுடன் இணைய முடியாது என தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் நேற்று தீர்ப்பளித்தார். இதனால் தினகரன் தரப்பினர் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். மேலும் தினகரன் மீது 18 எம்.எல்.ஏக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர்கள் விரைவில் அதிமுகவில் இணையலாம் எனவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசுகையில், டிடிவி தினகரன் இல்லாமல் அதிமுகவுடன் இணைய முடியாது. அமமுக பெரிதா, அதிமுக பெரிதா என்பதை 20 தொகுதி இடைத்தேர்தல் மூலம் மக்கள் தீர்மானிப்பார்கள் என்றார்.