திடீரென நீதி மன்றத்தில் மயங்கி விழுந்த நிர்மலா தேவி..?!

 

திடீரென நீதி மன்றத்தில் மயங்கி விழுந்த நிர்மலா தேவி..?!

ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதி மன்றத்தில் ஆஜரான நிர்மலா தேவி சாமி வந்துவிட்டதாகக் கூறி தியானத்தில் ஈடுபட்டு பாவனை செய்தார்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றும் நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளைத் தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயன்றதாக எழுந்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டுக் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பல முறை ஜாமீன் கோரி நிர்மலா தேவி அளித்த மனுவிற்கு நீதி மன்றம் மறுப்பு தெரிவித்தது. அதனையடுத்து, கடந்த மார்ச் மாதம் நிபந்தனையின் அடிப்படையில் நிர்மலா தேவிக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. 

Nirmala devi

ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதி மன்றத்தில் ஆஜரான நிர்மலா தேவி சாமி வந்துவிட்டதாகக் கூறி தியானத்தில் ஈடுபட்டு பாவனை செய்தார். அதனைத் தொடர்ந்து இன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதி மன்றத்தில் நிர்மலா தேவியுடன் வழக்கில் கைது செய்யப் பட்ட உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆஜர் படுத்தப்பட்டனர். 

Nirmala devi

அப்போது திடீரென நிர்மலா தேவி மயங்கி விழுந்துள்ளார். உடனே அங்கிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தண்ணீர் தெளித்து மயக்கத்தைத் தெரிய வைத்துள்ளனர். நிர்மலா தேவி மன உளைச்சலால் மயங்கினாரா அல்லது உடல் சோர்வால் மயங்கி விழுந்தாரா எனத் தெரியவில்லை. முதலுதவி செய்த பிறகு நிர்மலா தேவி நலமாக உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.