திடீரென டிஸ்மிஸ் செய்த ஐடி நிறுவனம் : திருடனாக மாறிய பொறியியல் பட்டதாரி

திடீரென டிஸ்மிஸ் செய்த ஐடி நிறுவனம் : திருடனாக மாறிய பொறியியல் பட்டதாரி

சென்னையில் தனியார் ஐடி கம்பெனியில் வேலையிழந்த ஒருவர் மீண்டும் அடுத்த வேலை தேடி மனமில்லாமல் ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்து வந்துள்ளார்.

சென்னையில் தனியார் ஐடி கம்பெனியில் வேலையிழந்த ஒருவர் மீண்டும் அடுத்த வேலை தேடி மனமில்லாமல் ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்து வந்துள்ளார்.

theif

சென்னை திருநின்றவூர் சேர்ந்த உதயசூரியன் என்பவர் பெருங்களத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை செய்துவந்தார் சமீபத்தில் அந்த கம்பெனி மூடப்பட வேலையை இழந்தார் உதயசூரியன். இதையடுத்து மீண்டும் உழைக்க மனமில்லாத உதயசூரியன் ஏடிஎம் மையங்களை உடைத்து பணம் சம்பாதிக்கலாம் என முடிவுசெய்து அதற்காக ஹாலிவுட் திரைப்படங்களை தொடர்ந்து பார்த்து வந்துள்ளார். 

atm

ஹாலிவுட் படத்தில் காண்பிக்கப்படும் காட்சிகளை முழுவதுமாக தெரிந்துகொண்டு இரண்டு மூன்று ஏடிஎம்களில் இதுவரை நான்கு லட்ச ரூபாய் கொள்ளை அடித்துள்ளார். மீண்டும் ஆவடி அடுத்த முத்தபுதுபேட்டை கிராமத்தில் ஏடிஎம் மையங்களில் கைவரிசை காட்டும் போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். முன்னதாக ஏடிஎம் மையத்துக்குள் செல்வதற்குமுன் சிசிடிவி கேமரா மீது ஸ்ப்ரே அடித்து விட்டு உள்ளே நுழைந்து உள்ளார்.