திக்கு முக்காடும் திமுக… முட்டி மோதும் நிர்வாகிகள்… மு.க.ஸ்டாலினுக்கு இப்படியொரு சோதனையா..?

 

திக்கு முக்காடும் திமுக… முட்டி மோதும் நிர்வாகிகள்… மு.க.ஸ்டாலினுக்கு இப்படியொரு சோதனையா..?

எல்லாரையும் அனுசரித்து போகும் வரை பொறுப்பாளராக போட வேண்டும் என தொண்டர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

மதுரை பஞ்சாயத்தை சென்னையில் பேசி முடித்து இருக்கிறார்கள். மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க., பொறுப்புக் குழு உறுப்பினர்கள் கோ.தளபதிக்கும், வேலுசாமிக்கும் எப்போதும் ஆகாது.  சமீபத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் இருவருமே காரசாரமாக மோதிக் கொண்டார்கள்.

 இரு தரப்பையும் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து முதன்மைச் செயலர் டி.ஆர்.பாலு பஞ்சாயத்து பேசி இருக்கிறார்.

அதில், வேலுசாமி மேல்தான் தப்பு இருக்கிறது என தெரிய வந்துள்ளது. பிறகு மூத்த நிர்வாகியான நீங்களே, இப்படி நடந்துக்கலாமா? என அறிவுரை சொல்லி அனுப்பி இருக்கார். மதுரை மாநகர் மாவட்டத்துக்கு, எல்லாரையும் அனுசரித்து போகும் வரை பொறுப்பாளராக போட வேண்டும் என தொண்டர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.