தாவூத் பாகிஸ்தானில் இருக்கிறார் – யு.எஸ்! அடப்பாவிங்களா, இப்பதான் இதையே கண்டுபுடிக்கிறீங்களா?

 

தாவூத் பாகிஸ்தானில் இருக்கிறார் – யு.எஸ்! அடப்பாவிங்களா, இப்பதான் இதையே கண்டுபுடிக்கிறீங்களா?

பின்லேடனை பின்வாசல் வழியாக பாகிஸ்தானுக்கு அழைத்துவந்து, அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டு பின்லேடனையே தேடிய பாகிஸ்தானா, தாவூத் இப்ராஹிம் இருப்பதை ஒத்துக்கொள்ளப் போகிறது. தாவூத் இப்ராஹிம்னு ஒரே ஒருத்தர்கூட பாகிஸ்தானில் இல்லை என்றே சாதித்து வருகிறது.

இந்தியாவிலிருந்து தப்பியோடி, 1993 முதல் பாகிஸ்தானில் ரகசியமாய் இருந்துகொண்டு, இந்தியா மட்டுமல்ல, உலகெங்கும் தீவிரவாத செயல்கள், சட்டவிரோத பணப்பரிமாற்றம், ஆட்கடத்தல் என பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறான் தாவூத் இப்ராஹிம். பாகிஸ்தான் அவனுக்கு திரைமறைவு ஆதரவை வழங்கிக்கொண்டு இருக்கிறது என்பதும், இந்தியாவில் நிகழும் பெரும்பாலான தீவிரவாத செயல்களுக்குப் பின்னால், தாவுத்தும் அவனின் டி கம்பெனியும் இருக்கின்றனர் என்பதும் இந்தியாவின் நீண்டநாள் குற்றச்சாட்டு. பின்லேடனை பின்வாசல் வழியாக பாகிஸ்தானுக்கு அழைத்துவந்து, அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டு பின்லேடனையே தேடிய பாகிஸ்தானா, தாவூத் இப்ராஹிம் இருப்பதை ஒத்துக்கொள்ளப் போகிறது. தாவூத் இப்ராஹிம்னு ஒரே ஒருத்தர்கூட பாகிஸ்தானில் இல்லை என்றே சாதித்து வருகிறது.

Jabir Moti

இந்நிலையில், லண்டனில் ஜாபிர் மோடி என்ற பாகிஸ்தானியர் கைது செய்யப்படுகிறார். “இந்த ஜாபிர் மோடியை எங்கள் நாட்டுக்கு நாடு கடத்தவேண்டும், இவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எங்கள் நாட்டில் உள்ளன” என லண்டன் நீதிமன்றத்தில் அமெரிக்கா கோரிக்கை விடுத்திருக்கிறது. லண்டனில் கைது செய்யப்பட்ட மோடிக்கும் அமெரிக்காவுக்கும் என்ன தொடர்பு என நீதிபதி விசாரிக்க, இந்த மோடிதான் தாவூத் இப்ராஹிமின் வலதுகை, பாகிஸ்தானில் இருந்துகொண்டு உலகெங்கும் பல்வேறு குற்றங்களை தாவூத், இந்த மோடியை வைத்துத்தான் நிகழ்த்துகிறார் என்ற உண்மையை அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. இதைத்தானேய்யா, 20 வருஷமா நாங்க கத்திகத்தி சொல்லிகிட்டு இருக்கோம் என தலையில் அடித்துக்கொண்டுள்ளது இந்தியா!