தாய் கண் முன்னே மகன் உடல் சிதறி உயிரிழந்த பரிதாபம் ! திருப்பாதிரிபுலியூரில் சோக சம்பவம் !

 

தாய் கண் முன்னே மகன் உடல் சிதறி உயிரிழந்த பரிதாபம் ! திருப்பாதிரிபுலியூரில் சோக சம்பவம் !

கடலூர் மாவட்டத்தில் தாய்க்காக ரயிலில் இருந்து திடீரென இறங்கிய இளைஞர் நடைமேடையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிதம்பரத்தைச் சேர்ந்தவர் சரவணன் தன்னுடைய தாயார் விஜயாவுடன் திருசெந்தூர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

கடலூர் மாவட்டத்தில் தாய்க்காக ரயிலில் இருந்து திடீரென இறங்கிய இளைஞர் நடைமேடையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிதம்பரத்தைச் சேர்ந்தவர் சரவணன் தன்னுடைய தாயார் விஜயாவுடன் திருசெந்தூர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். ரயில் புறப்படும் நேரத்தில் நடைமேடைக்கு வந்த அவர்கள் முன்பதிவு பெட்டி என தெரியாமல் ஏறிவிட்டனர். பின்னர் அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் இருவரையும் இந்தி மொழியில் திட்டி உள்ளார்.

mother

தெரியாமல் ரிசர்வேஷன் பெட்டியில் ஏறிவிட்டோம் என்று சரவணன் சொன்னது டிடிஆருக்கு புரியவில்லை. இதையடுத்து 2 பேரும் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். பின்னர் இருவரும் முன்பதிவில்லா பெட்டியில் ஏறுவதற்காக வேகமாக சென்றனர். அதற்குள் ரயில் புறப்பட முதலில் சரவணன் ஏறிவிட்டார். ஆனால் அவரது தாய் விஜயா ஏறவில்லை. அம்மாவை விட்டுவிட்டோமே என்று பதறிய சரவணன் நடைமேடையில் இருந்து வேகமாக சென்ற ரயிலில் இருந்து இறங்க முயற்சித்தார். அப்போது கால் சறுக்கு நடைமேடைக்கும், ரயில் பெட்டிகளுக்கும் இடையே சிக்கி அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். தனது கண் எதிரே மகன் அடிபட்டு உயிரிழந்ததை பார்த்த விஜயா கதறி அழுதார்.

train

பொதுவாகவே ரயிலில் பயணம் செய்பவர்கள் குறைந்தபட்சம் 10 நிமிடங்களுக்கு முன்னேரே நடைமேடைக்கு சென்றுவிட்டால் நாம் ஏறவேண்டிய பொதுப்பெட்டி நிற்கும் இடம் அருகே செல்வதற்கு கால அவகாசம் இருக்கும். கடைசி நிமிடத்தில் இதுபோன்று அவசர அவசரமாக ரயிலில் ஏறும்போது அகால மரணம் ஏற்பட்டு விடுகிறது. இதுகுறித்து பயணிகள் சிலர் டிடிஆருக்கு தமிழ் தெரியாததும் இவர்கள் அலைக்கழிக்கப்பட்டதற்கு காரணம் என தெரிவித்தனர். எனவே தமிழ் தெரிந்தவர்களை பணிஅமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.