தாயில்லாமல் தாய் பாலை உருவாக்கிய மருத்துவர்கள்!

 

தாயில்லாமல் தாய் பாலை உருவாக்கிய மருத்துவர்கள்!

சிங்கப்பூரைச் சேர்ந்த  Turtletree Labs என்ற நிறுவனம் செயற்கை முறையில் தாய்ப்பாலை உற்பத்தி செய்யும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. 

சிங்கப்பூரைச் சேர்ந்த  Turtletree Labs என்ற நிறுவனம் செயற்கை முறையில் தாய்ப்பாலை உற்பத்தி செய்யும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. 

தாய்ப்பால், பிறந்தகுழந்தையின் முதல் ஆகாரம்; ஆதி உணவு…எப்போதும் அதற்கு ஈடான உணவு என்று எதுவும் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான அத்துணை சத்துகளும் நிறைந்துள்ளன. ஆனால் இன்றைய நவ நாகரீக பெண்கள் அழகுக்காக குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்துவருகின்றனர். இன்னும் சிலர் பணிசுமை காரணமாக தாய்ப்பாலிலிருந்து குழந்தைகளை தள்ளிவைக்கின்றன. ‘

breast milk

இதற்காக செயற்கை முறையில் தாய்ப்பாலை தயாரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிறுவனத்தின் கூற்றுப்படி எந்த விலங்குகளின் தாய்ப்பாலையில் செயற்கை முறையில் தயாரிக்க முடியுமாம். அதாவது சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழும் தாய்மார்கள் ஆய்வுக்காக தானமாகக் கொடுத்த தாய்ப்பாலிலிருந்து மூல உயிரணுக்களை எடுத்து செயற்கை முறையில் தாய்ப்பால் உருவாக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  உயர் தரமான பாலை உற்பத்திசெய்ய பல பெண்களிடமிருந்து அதிக வகையான மூல உயிரணுக்கள் தேவைப்படுகின்றன என்றும், அடுத்த ஆண்டுக்குள் நாள் ஒன்றுக்கு 500 லிட்டர் தாய்ப்பாலை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் Turtletree Labs நிறுவனம் தெரிவித்துள்ளது.