தாமிரபரணி புஷ்கர விழா 2018 : பாபநாசத்தில் மகா புஷ்கர விழா கோலாகல தொடக்கம்

 

தாமிரபரணி புஷ்கர விழா 2018 : பாபநாசத்தில் மகா புஷ்கர விழா கோலாகல தொடக்கம்

தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர விழா இன்று தொடங்கி வருகின்ற 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு நதியினை ஜோதிட சாஸ்திரம் குறிப்பிட்டுள்ளது.

பாபநாசத்தில் தாமிரபரணி பு‌ஷ்கர விழாவினை இன்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். அதனையடுத்து அவர் திருப்புடைமருதூர், நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் ஆகிய இடங்களில் நடைபெறும் பு‌ஷ்கர விழாக்களிலும் பங்கேற்கிறார்.

tamirabahrani

இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டு நடைபெறும் குருபெயர்ச்சியின் பொழுது ஒவ்வொரு நதிகளை சிறப்பிப்பது வழக்கமாகும்.இந்தாண்டிற்கான  குரு பெயர்ச்சி கடந்த  4 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சியானார்.

விருச்சிக ராசிக்கு ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள நதி தாமிரபரணி நதியாகும். இதனை அடிப்படையாக கொண்டு தான் இந்த புஷ் கர விழா தாமிரபரணி ஆற்றில் நடைபெறுகிறது .12 ராசிகளுக்கு ஏற்ப 12 நதிகளில் குருபெயர்ச்சியையொட்டி புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

thamirabharani

அதில் தமிழகத்தில் 2 நதிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு மயிலாடுதுறை ஆற்றில் காவிரி புஷ்கர விழா விழா கொண்டாடப்பட்டது.அதை தொடர்ந்து இந்த ஆண்டு பொதிகை மலையில் உற்பத்தியாகி வங்க கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவினை முன்னிட்டு நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பல்வேறு இடங்களில், பல்வேறு அமைப்புகள் சார்பில் மகா புஷ்கர விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது .

tamirabharani

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 143 படித்துறைகளில் பு‌ஷ்கர விழா பூஜைகள் நடைபெறுகின்றது.