தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் – சிறைக்கு செல்ல இருந்த தம்பியை காப்பாற்றிய முகேஷ் அம்பானி

 

தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் – சிறைக்கு செல்ல இருந்த தம்பியை காப்பாற்றிய முகேஷ் அம்பானி

உச்சகட்ட நெருக்கடியில் சிக்கி விழிபிதுங்கி நின்றிருந்த தம்பி அனில் அம்பானியை கடைசி நேரத்தில் கை கொடுத்து காப்பாற்றி இருக்கிறார் அண்ணன் முகேஷ் அம்பானி

உச்சகட்ட நெருக்கடியில் சிக்கி விழிபிதுங்கி நின்றிருந்த தம்பி அனில் அம்பானியை கடைசி நேரத்தில் கை கொடுத்து காப்பாற்றி இருக்கிறார் அண்ணன் முகேஷ் அம்பானி.

சகோதர சண்டை 

ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானி எதிர்ப்பாராத விதமாக மறைந்த பின்பு, ஏற்பட்ட சொத்து தகராறில் சகோதரர்களான அனில் மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் உறவில் விரிசல் ஏற்பட்டது. மனஸ்தாபத்தோடே சொத்துகளை பிரித்துக் கொண்ட இவர்கள் ஆளுக்கொரு திசையில் தாங்கள் உண்டு தங்கள் தொழில் உண்டு என்று இருந்தனர். சமீபமாக நடந்த முகேஷ் அம்பானியின் மகன் திருமணம் மற்றும் மகள் திருமணத்தில் கூட அனில் அம்பானி கலந்து கொள்ளவில்லை.

ambani brothers

ஆனால், பிரிவிற்கு பிறகு முகேஷ் அம்பானி தொட்டதெல்லாம் துலங்க அவரது தொழில் வளர்ச்சி அபார வளர்ச்சி அடைந்து வந்தது. அப்படியே எதிர்மறையாக அனில் அம்பானி தொட்டதெல்லாம் வில்லங்கமாக விஸ்வரூபமெடுத்து. ஏகப்பட்ட கடன் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறார் அனில் அம்பானி.

உச்சகட்ட நெருக்கடி 

இந்நிலையில், எரிக்சன் நிறுவனத்திற்கு அனில் அம்பானி தர வேண்டிய 550 கோடி ரூபாய் பணத்தை திருப்பி கேட்டு கேட்டு அலுத்து போன அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டியது. உச்சநீதிமன்றம் மார்ச் 19-ஆம் தேதிக்குள் எரிக்சன் நிறுவனத்திற்கு தர வேண்டிய தொகையை வட்டியோடு திருப்பி தர வேண்டும் இல்லையேல் 3 மாதம் சிறை செல்ல வேண்டும் என கெடு விதித்தது.

anil ambani

புதிய சிக்கலாக, பி.எஸ்.என்.எல் மற்றும் எஸ்.பி.ஐ வங்கி ஆகிய நிறுவனங்கள், அனில் அம்பானி தங்களுக்கு தர வேண்டிய கடனைத் தான் முதலில் தர வேண்டும் என நெருக்கடி தந்தன. இந்நிலையில் தான் எரிக்சன் நிறுவனத்திற்கு தர வேண்டிய ரூ.550 கோடியை வட்டியோடு தந்து கடனை அடைத்து விட்டோம் என அனில் அம்பானி தரப்பு அறிவித்துள்ளது.

தம்பி சிறைக்கு செல்வதை விரும்பாத முகேஷ்  அம்பானி தான் கடைசி நேரத்தில் உதவியிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ” கடைசி நேரத்தில் எனக்கு உதவிய என் குடும்ப உறுப்பினர்கள் அண்ணன் முகேஷ்  மற்றும் அண்ணி நீட்டா ஆகியோருக்கு நன்றி.” என அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.