தவிக்க விட்டு போன பேபிம்மா… தீபாவை நம்பிபோய் நடுத்தெருவுக்கு வந்த ’நொல்லை மாதவன்கள்..’!

 

தவிக்க விட்டு போன பேபிம்மா… தீபாவை நம்பிபோய்  நடுத்தெருவுக்கு வந்த ’நொல்லை மாதவன்கள்..’!

தீபாவை நம்பி போனோம். அவங்க விரட்டிட்டாங்க… தாய் கட்சிக்கு வந்தாலும் விரட்டறாங்க… நாங்க எங்கதான் போறது என்று புலம்பி வருகிறார்கள்.

தவிக்க விட்டு போன பேபிம்மா… தீபாவை நம்பிபோய்  நடுத்தெருவுக்கு வந்த ’நொல்லை மாதவன்கள்..’!

பேபிம்மா தீபா பேரவையினர் நிலைமை திரிசங்கு சொர்க்க நிலைபோல கவலைக்கிடமாக உள்ளது. ஜெ.தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் தீபா அரசியலுக்கு முழுக்கு போட்டநிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஜெ.தீபா பேரவை நிர்வாகிகள் பேரவையை கலைத்து விட்டு பல்வேறு கட்சிகளில் இணைந்து கொண்டனர்.

 

திருச்சி மலைக்கோட்டை மாநகரில் மாவட்ட ஜெ.தீபா பேரவை செயலாளர் அதிலிருந்து விலகி அதிமுகவில் இணைத்து கொள்வதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இதற்கான இணைப்பு விழாவை ஸ்ரீரங்கத்தில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அங்குதான் பிரச்னையே ஆரம்பம். இந்த இணைப்பு விழாவில் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பி தலைமையில் சிட்டி அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் முன்னிலையில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்த இணைப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜெ.தீபா பேரவை செயலாளர் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஸ்ரீரங்கத்தில் உள்ள மண்டபத்தில் திரண்டிருந்தனர். தகவல் அறிந்து மண்டபத்திற்கு திரண்டு வந்த ஸ்ரீரங்கம் அதிமுக பகுதி செயலாளர் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் எங்களுக்கு தெரிவிக்காமலும், வட்ட செயலாளருக்கு தகவல் கூறாமலும் எப்படி இணைப்பு விழா நடத்தலாம்.

 

கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்த அதிமுக நிர்வாகிகளுக்கு பதவி வழங்காமல் தற்போது கட்சியில் இணைய உள்ளவர்களுக்கு பதவியா என மாவட்ட செயலாளருக்காக மண்டபம் முன் காத்திருந்ததோடு, அவரை காரை விட்டு இறங்க விடாமல் காரை மறித்து போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார்களாம்.

இந்த தகவல் தெரிய வர மாவட்ட செயலாளர், அமைச்சர்கள் உடனடியாக தற்போது இந்த இணைப்பு விழாவை ரத்து செய்வதாக அறிவித்த தகவல் மண்டபத்தில் கூடியிருந்த ஜெ.தீபா பேரவையினர் கடும் அதிர்ச்சி அடைந்தனராம்.

பின்னர் மண்டபத்தில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். விழா ரத்து என தெரிவிக்கப்பட்டதை அடுத்து சமைத்த உணவு வீணாகிவிடும். அனைவரும் சாப்பிட்டு செல்ல அறிவுறுத்தப்பட்டதாம். விழாவும் போச்சு, பணமும் போச்சு என தலையில் அடித்து கொண்டு நிர்வாகிகள் வேதனையுடன் சென்றார்களாம். தீபாவை நம்பி போனோம். அவங்க  விரட்டிட்டாங்க… தாய் கட்சிக்கு வந்தாலும் விரட்டறாங்க… நாங்க எங்கதான் போறது என்று புலம்பி வருகிறார்கள்.