தவறான ரத்தம் செலுத்தியதால் என் கல்லீரலில் 75% கெட்டுபோய் விட்டது: அமிதாப் பச்சன் உருக்கம்!

 

தவறான ரத்தம் செலுத்தியதால் என் கல்லீரலில் 75% கெட்டுபோய் விட்டது: அமிதாப் பச்சன் உருக்கம்!

தனது கல்லீரலில் 75 சதவீதம் பாதிப்படைந்துவிட்டதாகப் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்

தவறான ரத்தம் செலுத்தியதால் என் கல்லீரலில் 75% கெட்டுபோய் விட்டது: அமிதாப் பச்சன் உருக்கம்!

மும்பை : தனது கல்லீரலில் 75 சதவீதம் பாதிப்படைந்துவிட்டதாகப் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமா ஆளுமைகளில் மிக முக்கியமானவர் அமிதாப் பச்சன். பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து பாலிவுட் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். கடந்த 50ஆண்டு காலமாக திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம்வரும் இவர் சினிமாவை தாண்டி ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியையும் செய்து வருகிறார். 

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு காசநோய் விழிப்புணர்வு குறித்து அமிதாப்பச்சன் பேசினார். அதில், உடல் பரிசோதனை விழிப்புணர்வுக்காக என்னுடைய தனிப்பட்ட கதையையே கூறுகிறேன் நான் காசநோயிலிருந்து மீண்டு வந்தவன். எனது கல்லீரலில் 75 சதவீதம் கெட்டுப்போய்விட்டது. இதற்கு காரணம் தவறான ரத்தம் செலுத்தப்பட்டது தான்.  இது எனக்கு 20 வருடங்கள் கழித்துத் தான் தெரியும். எல்லா நோய்க்கும் சிகிச்சை உண்டு. ஆனால்  நோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிய  உடல் பரிசோதனை செய்வது அவசியம். அப்போது தான் சிகிச்சையளிக்க முடியும்.  அதனால் எல்லோரும் உடல் பரிசோதனை செய்யுங்கள். எனக்கு நடந்து போல யாருக்கு வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது’ என்றார்.