தவறான சிகிச்சையால் பலியான கல்லூரி மாணவி: சித்த மருத்துவரைக் கைது செய்யக்கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!

 

தவறான சிகிச்சையால் பலியான கல்லூரி மாணவி: சித்த மருத்துவரைக் கைது செய்யக்கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!

சித்த மருத்துவர் அளித்த  சிகிச்சையால் கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

கோவை: சித்த மருத்துவர் அளித்த  சிகிச்சையால் கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

கோவை  நேதாஜி நகரைச் சேர்ந்தவர் கணேசன்-  மல்லிகா தம்பதியின் மகள்  சத்யப்பிரியா. இவர் கோவை அரசு கல்லூரியில் பொலிடிக்கல் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். சத்யப்ரியாவுக்கு மாதவிடாய் பிரச்னை இருந்து வந்துள்ளார். இதனால் உறவினர் அறிவுறுத்தலின் பேரில், செல்வபுரம் மனோன்மணி சித்த வைத்திய சாலைக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அங்குச் சித்த மருத்துவர் குருநாதன் அவருக்குக் கடந்த ஜனவரி மாதம் முதல் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

guru

இந்நிலையில் சத்யப்ரியா திடீர் மரணம் அடைந்துள்ளார். சித்த மருத்துவர் குருநாதனின்  தவறான சிகிச்சையால் தான் மகள் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் புகார் கூறியுள்ளனர். இதுகுறித்து கூறியுள்ள சத்யப்ரியாவின் தந்தை, ‘ குருநாதனிடம் சிகிச்சைக்குச் சென்ற முதலே மகளுக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது. முகம் வீங்கியது. அது குறித்து அவரிடம் கேட்டபோது அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டார். கடந்த ஏப்ரல் 22ஆம்  தேதி அவள் நிலைமை மோசமானதைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். இதைத் தொடர்ந்து கடந்த மே 1 ஆம்  தேதி குருநாதன் மீது போலீசில் புகார் கொடுத்தோம். மீண்டும் மே  31 ஆம்  தேதி அவரை  கைது செய்யக்கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு அளித்தோம். ஆனால்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் மகளும் இறந்து விட்டாள்’ என்று வேதனையுடன் கூறியுள்ளார் கணேசன்.

protest

மேலும் குருநாதனை கைது செய்யக்கோரி சத்யப்ரியாவின் உறவினர்கள் சோவை அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.