தள்ளிப்போனது ‘சர்வம் தாளமயம்’

 

தள்ளிப்போனது ‘சர்வம் தாளமயம்’

இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘சர்வம் தாளமயம்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போனது.

சென்னை: இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘சர்வம் தாளமயம்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போனது.

முழுக்க முழுக்க இசையை மையமாக வைத்து ‘மியூசிக்கல் ஃபிலிமாக’ உருவாகியுள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். ராஜீவ் மேனனின் மைண்ட்ஸ்க்ரீன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

sarvamthaalamayam

‘மின்சார கனவு’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களை தொடர்ந்து ராஜீவ் மேன்ன- ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே இப்படத்தின் டீசர், இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தை வரும் டிச.28ம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது.

ஆனால், ஒரு சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தற்போது மீண்டும் தள்ளிப்போவதாக படட தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சர்வம் தாளமயம்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.